யோகி: உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை

யோகி: உத்தரப் பிரதேசத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை

1 mins read
6a6a3fec-2265-48c0-a898-cdbbdb92b32f
கொரோனா கிருமித்தொற்றின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் இந்தியாவிற்கு உதவும் வகையில் சிங்கப்பூரிலிருந்து ஆக்சிஜன் டேங்குகள் அனுப்பி வைக்கப்பட்டன. சாங்கி விமான நிலையத்தில் இந்திய விமானப்படை விமானம் ஒன்றில் நேற்று முன்தினம் அவை ஏற்றப்பட்டன. படம்: ராய்ட்டர்ஸ் -

உத்­தர பிர­தே­சத்­தில் கொரோனா நோயா­ளி­க­ளால் மருத்­து­வ­ம­னை­கள் நிரம்பி வழி­கின்­றன.

ஆனால் எந்த மருத்­து­வ­ம­னை­யி­லும் ஆக்­சி­ஜ­னுக்குத் தட்­டுப்­பாடு இல்லை என அம்­மா­நில முதலமைச்சர் யோகி ஆதித்­ய­நாத் தெரி­வித்­துள்­ளார்.

யோகி ஆதித்­ய­நாத் கூறு­கை­யில், "உத்­த­ர ­பி­ர­தே­சத்­தில் எந்த தனி­யார் மற்­றும் அரசு மருத்­து­வ

­ம­னை­க­ளி­லும் ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை என்­பதே கிடை­யாது.

"தற்­போது பிரச்­சினை என்­ன­வென்­றால், ஆக்­சி­ஜ­னைப் பதுக்­கு­வ­தும், கள்­ளச்­சந்­தை­யில் விற்­பனை செய்­வ­தும்­தான். அதை இரும்­புக்­க­ரம் கொண்டு முடி­வுக்கு கொண்டு வரு­வோம்.

"முதல் அலை­யோடு ஒப்­பி­டு­கை­யில் இந்த ஆண்டு கொரோனா 2வது அலை­யில் பாதிப்பு 30 மடங்கு அதி­க­ரித்­துள்­ளது," என்­றும் அவர் சொன்னார்.