மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி

மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி

1 mins read
c26683a0-e75a-48c6-ac9c-2439a041e73d
கொரோனா கிருமித்தொற்றின் இரண்டாவது அலையால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளது. இதனால் ஆக்சிஜன் உதவி யோடு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் மளமளவென்று அதிகரித்துள்ளது.ஆக்சிஜன் தேவையைச் சமாளிக்க இந்திய அரசாங்கம் போராடி வருகிறது. ஆக்சிஜன் நிரப்பப் பட்ட உருளைகளை எடுத்துச் செல்லும் ஊழியர்கள்.படங்கள்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில்

கொவிட்-19 தொற்­று­களும் மர­ணங்­களும் ஒவ்­வொரு நாளும் புதிய உச்­சத்தை எட்­டு­வது ஒரு­பக்­கம், கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க போது­மான ஆக்சிஜன் இல்­லா­மல் ஏற்­படும் மர­ணங்­கள் இன்­னொரு பக்­கம் என திண­றிக் கொண்­டி­ருக்­கின்­றன இந்­திய மருத்­து­வ­ம­னை­கள்.

இந்­நி­லை­யில், 551 மருத்­துவ பிரா­ண­வாயு உற்­பத்தி நிலையங்கள் அமைப்­ப­தற்கு பிர­த­மர் பாது­காப்பு நிதி­யிலிருந்து நிதி ஒதுக்க பிர­த­மர் அலு­வ­ல­கம் ஒப்­பு­தல் அளித்­துள்­ளது.

இந்த ஆலை­கள் மாவட்ட அள­வில் ஆக்சிஜன் தேவையைப் பெரு­ம­ளவு ஈடு செய்­யக்­கூ­டும் என்­ப­தால் விரை­வில் செயல்­பட வேண்­டும் என்­றும் பிர­த­மர் அலு­வ­ல­கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

சுகா­தார, குடும்ப நல அமைச்­சால் அடை­யா­ளம் காணப்­படும் அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஆக்சிஜன் உற்­பத்தி நிலையங்கள் அமைக்­கப்­படும்.

"மாவட்ட தலை­மை­யக அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஆக்சிஜன் உற்­பத்தி ஆலை­களை அமைப்­ப­தன் அடிப்­படை நோக்­கம், பொது சுகா­தார அமைப்பை மேலும் வலுப்­ப­டுத்­து­வ­தோடு, இந்த மருத்­து­வ­

ம­னை­கள் ஒவ்­வொன்­றி­லும் ஆக்சிஜன் உற்­பத்தி வசதி இருப்­பதை உறுதி செய்­வ­து­மா­கும்.

"இது­போன்று மருத்­து­வ­ம­னைக்­குள்­ளேயே ஆக்சிஜன் உற்­பத்தி செய்­யும் வச­தி­யால் மருத்­து­வ­

ம­னை­கள் மற்­றும் அந்த மாவட்­டத்­தின் அன்­றாட ஆக்சிஜன் தேவை­

க­ளைப் பூர்த்தி செய்­ய­லாம்," என்று பிர­த­மர் அலு­வ­லக அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.