இந்தியாவில் கொரோனா கிருமித் தொற்றால் பெரிதும் பாதிக்கப்
பட்டுள்ள டெல்லி, மகாராஷ்டிராவைத் தொடர்ந்து கர்நாடகாவிலும் அன்றாட கிருமித் தொற்று எண்ணிக்கையும் மரணங்களும் புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
கர்நாடகாவில் நேற்று 17,342 புதிய கிருமித்தொற்று சம்பவங்களும் 149 மரணங்களும் பதிவாகின. இதையடுத்து பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை அங்கு 13 லட்சத்தைக் கடந்தது.
இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் மளமளவென்று உயர்ந்து வருகிறது. தற்போது 234,483 பேர் சிகிச்சை பெற்று வருவதால் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்து
உள்ளது.
இவர்களில் 1,280 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் இல்லாத நோயாளிகள் பலருக்கும்கூட ஆக்சிஜன் தேவை உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தகவல்களின் அடிப்படையில், தற்போதைய ஆக்சிஜன் தேவை 54.5 விழுக்காடாக உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிருமித்தொற்றின் முதல் அலையின் போது இது 41.1 விழுக்காடாக இருந்தது.
தற்போது, மக்கள் மூச்சுத் திணறலோடும் ஆக்சிஜனைக் குறைவாக உள்ளிழுக்கும் திற
னோடும்தான் மருத்துவமனை
களை நாடுகிறார்கள்.
ஆக்சிஜன் மற்றும் மருத்துவ
மனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஆகியன மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவும் நகரமாக உருவெடுத்துள்ள பெங்களூருவில் அதற்கான தேவை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளதாக பிரபல மருத்துவமனை ஒன்றின் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகாவில் ஒவ்வொரு சதுர கிலோமீட்டருக்கும் 300 கொவிட்-19 நோயாளிகள் உள்ளதாக ஜீவன் ரக்ஷா எனும் பொது சுகாதார அறநிறுவனத்தின் பகுப்பாய்வு கூறுகிறது.
கர்நாடகாவில் இருக்கும் மொத்த தொற்று எண்ணிக்கையில் 50 விழுக்காடு பெங்களூருவில் உள்ளதாகவும் பகுப்பாய்வில் தெரிய வந்துள்ளது.
"மேலும் கிருமிப்பரவலுக்கும் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு வாழும் மக்களின் எண்ணிக்கைக்கும் தொடர்பு உள்ளது.
"வூஹான், பெங்களூரு இரு நகரங்களின் மக்கள்தொகையும் கிட்டதட்ட ஒன்று.
"ஆனால் வூஹானின் நிலப்பரப்பைவிட பெங்களூரு எட்டு மடங்கு சிறியது.
"ஆகவே மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ளதால் கிருமித்தொற்றும் அதிகமாக இருக்கும்," என்று விளக்கமளித்தார் கொவிட்-19க்கான மாநில தலைமை மருத்துவர் மஞ்சுநாத்.

