மும்பை: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக காணப்படும் மாநிலங்களில் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிராவின் மும்பை நகரில் தற்போது தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.
மும்பையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு பல நாட்களாக 10 ஆயிரத்தைத் தாண்டி பதிவாகி அதிர்ச்சி அளித்து வந்தது. இதையடுத்து, கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து புதிதாக தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த வியாழன்று 7,400 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 5,888 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகினர். கடந்த 24 மணி நேரத்தில் மும்பையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,888ஆக இருந்தது.
ஒரு நாளில் சராசரியாக 40 ஆயிரம் பேருக்கு கிருமித்தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. தற்போது பரிசோதனை எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 15 விழுக்காடு குறைந்துள்ளது மக்களுக்குச் சற்று ஆறுதலை அளித்துள்ளது.

