புதுடெல்லி: அரசியல் பணியை ஒதுக்கி வைத்து விட்டு மக்களுக்கு உதவுமாறு காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களுக்கு ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா சூழலை மத்திய அரசு சரிவர கையாளவில்லை என காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில், பிரதமரின் மன் கி பாத் உரை மற்றும் கொரோனா விஷயத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்டு
உள்ள பதிவில், "சிஸ்டம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, 'ஜன் கி பாத்' முக்கியம். இந்த சிக்கலான நேரத்தில் தேசத்துக்கு பொறுப்புள்ள குடி
மக்கள் அவசியம்.
காங்கிரஸ் கட்சியில் உள்ள என்னுடைய நண்பர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், உங்களின் அரசியல் பணியை ஒதுக்கிவைத்து, உதவிக்காக தவிக் கும் மக்களுக்கு உதவுங்கள். இதுதான் காங்கிரசின் தர்மம்," என தெரிவித்துள்ளார்.

