கோல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாவது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத் தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப் பட்டு இருந்தது.
இதன் முதல் கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி
யது. இதுவரை 6 கட்ட தேர்தல் கள் முடிந்துவிட்டன.
இன்று 7வது கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 36 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் 2 தொகுதி
களில் வேட்பாளர்களின் மரணத் தால் தேர்தல் தள்ளி வைக்கப் பட்டுள்ளது. இதனால் 34 தொகுதிக்கு தேர்தல் நடக்கிறது.
250 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். இதற்காக 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றைய தேர்தல் கோல்கத்தா, சாம்சேர் கஞ்ச், ஜாங்கிபூர், முர்ஷிதா பாத் ஆகிய 4 மாவட்டங்களில் நடக்கிறது.

