17 நாடுகளில் இந்தியாவின் உருமாறிய கிருமித்தொற்று

17 நாடுகளில் இந்தியாவின் உருமாறிய கிருமித்தொற்று

1 mins read
1701169e-493c-40d0-a297-06510af1878b
-

ஜெனிவா: இந்­தி­யா­வில் பெரு­கி­வ­ரும் கொரோனா தொற்­றுக்­குக் கார­ணம் எனக் கரு­தப்­படும் உரு­மா­றிய கொரோனா கிருமி 17 நாடு­களில் இருப்­ப­தாக நேற்று முன்­தி­னம் உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்­தது.

முத­லில் இந்­தி­யா­வில் கண்­ட­றி­யப்­பட்ட 'பி1617' எனப்­படும் உரு­மா­றிய கொரோனா கிரு­மி­யில் இருந்து சற்று மாறு­பட்ட கிருமி அந்த நாடு­களில் இருப்­ப­தா­கக் கூறப்­பட்­டது.

இந்த வகை கொரோனா கிரு­மி­கள் அதி­க­மா­கப் பர­வும் தன்மை கொண்­டவை என்­றும் மர­ணத்தை விளை­விக்­கும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டா­வது அலை தாக்­கத்­துக்கு புதிய வகை உரு­மா­றிய கொரோனா கிருமி (பி.1.617) கார­ண­மாக இருக்­கும் என நிபு­ணர்­கள் கரு­து­கி­றார்­கள்.

பல்­வேறு நாடு­களில் இருந்து பெறப்­பட்ட மாதி­ரி­களை ஆய்வு செய்­த­தன் மூலம் உரு­மா­றிய கிரு­மிப் பர­வல் குறித்து தெரி­ய­வந்­துள்­ளது.