அசாமில் கடும் நிலநடுக்கம்

அசாமில் கடும் நிலநடுக்கம்

1 mins read
121d2ba0-1003-460b-ad22-556bb82fe1a8
-

கௌஹாத்தி: அசாமில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் பெரிய சேதங்கள் ஏற்படவில்லை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேற்று காலை 7.51 மணிக்கு சோனிக்பூர் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் சில பகுதிகளிலும் இதைப் பொதுமக்கள் உணர்ந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் திரட்டி வருவதாக அசாம் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.