ரூ.75 கோடி ஊதியத்தை உதறித்தள்ளி துறவியான அதிகாரி

ரூ.75 கோடி ஊதியத்தை உதறித்தள்ளி துறவியான அதிகாரி

1 mins read
f232d40d-8690-4407-a052-5b21d9d173c3
இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தவர் பிரகாஷ் ஷா. படம்: இந்திய ஊடகம் -

தனியார் நிறுவனத்தில் ஆண்டுதோறும் 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த மூத்த அதிகாரி ஒருவர் திடீரென துறவி ஆகியுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தவர் பிரகாஷ் ஷா (படம்).

அந்நிறுவனத்தின் திட்டப் பிரிவின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார். கடந்தாண்டு இந்தியாவில் கொரோனா கிருமித்தொற்று பரவியபோது தாம் ஆடம்பர வாழ்க்கையைத் துறப்பதாக திடீரென அறிவித்தார் பிரகாஷ்.

அண்மையில் தாம் துறவியாகப் போவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து கடந்த 25ஆம் தேதி பிரகாஷ் ஷாவும் அவரது மனைவி நைனா ஷாவும் ஜைன மத துறவிக்கான தீட்சையைப் பெற்றனர். கணவன் மனைவி இருவரும் துறவறம் பூண்டுள்ள நிலையில்,

இவர்களது இளைய மகன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமது 24 வயதில் ஜைன மதத் துறவியானது தெரிய வந்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனப் பணியிலிருந்து விலகியபோது பிரகாஷ் ஷா ஆண்டுக்கு 75 கோடி ரூபாய் ஊதியம் பெற்று வந்தார்.