ரூ.75 கோடி ஊதியத்தை உதறித்தள்ளி துறவியான அதிகாரி

ரூ.75 கோடி ஊதியத்தை உதறித்தள்ளி துறவியான அதிகாரி

1 mins read
5e0005bd-501d-4d69-8307-74a282363555
-

மும்பை: தனியார் நிறுவனத்தில் ஆண்டுதோறும் 75 கோடி ரூபாய் சம்பளம் பெற்று வந்த மூத்த அதிகாரி ஒருவர் திடீரென துறவி ஆகியுள்ளார்.

இந்­தி­யா­வைச் சேர்ந்த பிர­பல ரிலை­யன்ஸ் நிறு­வ­னத்­தின் தலை­வர் முகேஷ் அம்­பா­னி­யின் நம்­பிக்­கைக்­கு­ரிய அதி­கா­ரி­யாக இருந்­த­வர் பிர­காஷ் ஷா (படம்).

அந்­நி­று­வ­னத்­தின் திட்­டப் பிரி­வின் துணைத்­த­லை­வ­ராகப் பொறுப்­பேற்­றி­ருந்­தார். கடந்­தாண்டு இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று பரவியபோது தாம் ஆடம்­பர வாழ்க்­கை­யைத் துறப்­ப­தாக திடீ­ரென அறி­வித்­தார் பிர­காஷ்.

அண்­மை­யில் தாம் துற­வி­யா­கப் போவ­தா­க­வும் தெரி­வித்­தார். இதை­ய­டுத்து கடந்த 25ஆம் தேதி பிர­காஷ் ஷாவும் அவ­ரது மனைவி நைனா ஷாவும் ஜைன மத துற­விக்­கான தீட்­சை­யைப் பெற்­ற­னர். கண­வன் மனைவி இரு­வ­ரும் துற­வ­றம் பூண்­டுள்ள நிலை­யில், இவர்­களது இளைய மகன் ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பே தமது 24 வய­தில் ஜைன மதத் துற­வி­யா­னது தெரிய வந்­துள்­ளது.

ரிலை­யன்ஸ் நிறு­வ­னப் பணி­யி­லி­ருந்து வில­கி­ய­போது பிர­காஷ் ஷா ஆண்­டுக்கு 75 கோடி ரூபாய் ஊதி­யம் பெற்று வந்­தார்.