சினிமா உலகில் தடம் பதித்த திரு கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று (ஏப்ரல் 30) அதிகாலை 3 மணியளவில் மரணமடைந்தார். அவருக்கு வயது 54.
சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கே.வி.ஆனந்தின் திடீர் மரணம் ரசிகர்களை உருக்குலைய வைத்துள்ளது.
கே.வி.ஆனந்துக்குக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொண்டைவலியும் உடல்சோர்வும் இருந்த காரணத்தால் அவர் கொவிட்-19 பரிசோதனை மேற்கொண்டார். அதையடுத்து அவருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியானது.
முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட நிலையில் இரண்டாவது தடுப்பூசிக்கு காத்திருந்த நிலையில் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் நடிகர் விவேக்கின் மறைவால் வந்த கவலை இன்னும் விலகாத நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார்.
இறுதியாக 2019ஆம் ஆண்டு சூர்யா நடித்த 'காப்பான்' படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார்.

