கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் எட்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. அதனைத் தொடர்ந்து, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன. 294 சட்டமன்றத் தொகுதிகளில் 148ல் வெற்றிபெறும் கட்சி ஆட்சியில் அமரலாம். நான்கு கருத்துக்கணிப்புகளில் திரிணாமூல் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் என தெரிவித்துள்ள வேளையில் ஒரு கருத்துக்கணிப்பு பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் மற்றொரு கணிப்பு இழுபறி நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளன.
மேற்கு வங்க தேர்தல் கருத்துக்கணிப்பு
1 mins read
-

