தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கும்பமேளா பக்தர்களில் 2,600 பேருக்கு தொற்று

1 mins read
192bc17b-9245-4940-b465-5890c53dcb8d
-

ஹரித்துவார்: முப்பது நாட்களாக நடந்து வந்த ஹரித்துவார் கும்பமேளா வெள்ளிக்கிழமை முடி

வடைந்தது.

இந்த 30 நாட்கள் கும்பமேளா திருவிழாவில் ஏறக்குறைய 70 லட்சம் பக்தர்கள் பங்கேற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஹரித்துவார் நகர தலைமை மருத்துவ அதிகாரி எஸ்.கே.ஜா கூறுகையில், "கொரோனா கிருமி பரவி வரும் நிலையில் அதை ஊக்குவிக்கும் வகையில் கும்பமேளா நடத்தப்பட்டது மிகப்பெரிய வருத்தமாக இருந்தது," எனத் தெரிவித்தார்

கும்பமேளாவுக்கான மருத்துவ அதிகாரி அர்ஜுன் சிங் செங்கார் கூறுகையி்ல், "கும்பமேளாவுக்கு வந்த கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருந்தது.

"கட்டுப்பாட்டு விதிகளை மதிக் காமல், சமூகவிலகலைக் கடைப்பிடிக்காமல் ஏராளமானோர் பங்கேற்றனர்.

"மடாதிபதிகள், சாதுக்கள் முதலில் கிருமித்தொற்று பரிசோதனை செய்ய மறுத்தனர். இருப்பினும் 2வது புனித நீராடலுக்குப் பின் பரிசோதனைக்கு ஒத்துழைத் தனர். ஏறக்குறைய இரண்டு லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ததில் 2,600 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது," என்றார்.