மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் ஆட்சி உறுதி

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் ஆட்சி உறுதி

3 mins read
f3b97fd4-454a-4a3e-8444-127a2e05edf2
கோல்கத்தாவிலும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் உள்ள கட்சி அலுவலகங்களில் திரிணாமூல் காங்கிரஸ் 200க்கு மேற்பட்ட இடங்களில் முன்னணியில் இருப்பதைக் கொண்டாட அக்கட்சி தொண்டர்கள் குவியத் தொடங்கினர். ஆனால், தொற்று தடுப்புக் கட்டுப்பாடுகள் காரணமாக காவல்துறையினர் அவர்களைக் கட்டுப்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ் -

சட்டமன்றத் தேர்தல்: இரவு 10 மணி நிலவரப்படி 219 இடங்களில் முன்னிலை

கோல்­கத்தா: தமிழ்­நாடு, கேரளா, புதுச்­சேரி, அசாம், மேற்கு வங்­கா­ளம் ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளின் தேர்­தல் முடி­வு­கள் நேற்று வெளி­யா­யின.

மேற்கு வங்­கத்­தின் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் மம்தா பானர்ஜி, பாஜக வேட்­பா­ளர் சுவெந்து அதி­கா­ரியை விட குறைந்த வாக்கு வித்­தி­யா­சத்­தில் பின்­தங்­கி­யுள்­ளது என முன்னதாகக் கூறப்­பட்­டது. இருப்­பி­னும் கடை­சிக்­கட்ட வாக்கு எண்­ணிக்­கை­யில் அவர் 1,200 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்­றி­பெற்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டதாகக் கூறப்பட்டது. பின்னர் 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றிபெற்றதாகக் கூறப்பட்டது.

இருப்­பி­னும் மேற்கு வங்­கத்­தில் திரி­ணா­மூல் காங்­கி­ர­சும், அசா­மில் பாஜ­க­வும், கேர­ளா­வில் கம்­யூ­னிஸ்ட் மார்க்­சிஸ்ட்­டும் ஆட்சி அமைக்க வாய்ப்­பி­ருப்­ப­தா­கத் தெரி­கிறது.

இந்­திய மாநி­லத் தேர்­தல்­களில் மேற்கு வங்­கா­ளத்­தில் நடை­பெற்ற தேர்­தல் ஒரு முக்­கி­ய­மான தேர்­த­லாக பல­ரா­லும் எதிர்­பார்க்­கப்­பட்டது.

மேற்கு வங்­கத்­தில் மொத்­த­முள்ள 294 தொகு­தி­களில், மம்தா பானர்­ஜி­யின் ஆளும் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் 219 தொகு­தி­க­ளில் முன்னிலை பெற்று மூன்­றா­வது முறை ஆட்­சி­ய­மைப்பதை உறு­தி­செய்­துள்­ளது.

இதனையடுத்து அவருக்கு மமதா பானர்ஜிக்கு உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பார­திய ஜனதா கட்சி 76 இடங்­க­ளை­யும், காங்­கி­ரஸ் 1 இடத்­தி­லும் சிபிஐ ஓர் இடத்­தி­லும் முன்­னணி பெற்­றுள்­ளன. இரண்டு தொகு­தி­களில் தேர்­தல் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

மேற்கு வங்க சட்­ட­மன்­றத் தேர்­தல் மார்ச் 27, ஏப்­ரல் 1, 6, 10, 17, 22, 26, 29 ஆகிய தேதி­களில் 8 கட்­டங்­க­ளாக நடை­பெற்­றது.

முத­ல­மைச்­சர் மம்தா தலை­மை­யி­லான திரி­ணா­மூல் காங்­கி­ரஸ், பாஜக, இட­து­சா­ரி­கள் மற்­றும் காங்­கி­ரஸ் அடங்­கிய கூட்­டணி என மும்­மு­னைப் போட்டி இருந்­த­போ­தி­லும், திரி­ணா­முல் காங்­கி­ர­சுக்­கும் பாஜ­க­வுக்­கும் இடை­யே­தான் கடு­மை­யான போட்டி நில­வி­யது.

மேற்கு வங்­கத்தை எப்­பா­டு­பட்­டா­வது தங்­கள் வசம் கொண்டு வந்­து­விட வேண்­டும் என்­ப­தில் பாஜக குறி­யாக இருந்­தது. அதற்­காக டெல்­லி­யில் இருந்து ஒட்­டு­மொத்த பாஜக தலை­வர்­களும் மேற்கு வங்­கத்­தில் முற்­று­கை­யிட்டு, தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்­ட­னர். அவர்­கள் அனை­வ­ரது தேர்­தல் பேச்­சு­க­ளுக்­கும் தனி ஒரு­வ­ராய் நின்று பதி­லடி கொடுத்து தேர்­தல் பரப்­புரை மேற்­கொண்­டார் மம்தா.

மம்தா கட்­சி­யி­லி­ருந்து அவ­ருக்கு நெருக்­க­மான சட்­ட­மன்ற, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அமைச்­சர்­களை தங்­கள் பக்­கம் இழுத்து அவரை பாஜக நிலை­குலைய வைத்­தது.

ஐந்து மாநி­லங்­க­ளின் சட்­ட­மன்­றத் தேர்­தல் அறி­விப்பு விடுப்­ப­தற்கு முன்­னரே பாஜ­க­வும் அதன் தலை­வர்­களும் மேற்கு வங்­கா­ளத்­தில் அதி­கக் கவ­னம் செலுத்தி தீவி­ர­மா­கத் தேர்­தல் பரப்­பு­ரை­யில் ஈடு­பட்டு வந்­த­னர்.

முன்­னர் நடை­பெற்ற மக்­க­ள­வைத் தேர்­த­லி­லேயே மேற்கு வங்­கா­ளத்­தில் மத்­திய கட்­சி­யான பாஜக 18 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது. அப்­போது திரி­ணா­முல் காங்­கி­ரஸ், 22 இடங்­களை மட்­டுமே வென்­றது.

அப்­போதே மேற்கு வங்­கத்­தில் பாஜக இரண்­டா­வது பெரிய கட்­சித் தகு­தி­யைப் பெற்­றது. அந்த நம்­பிக்­கை­யில், மேற்கு வங்க மக்­க­ளின் நன்­ம­திப்­பைப் பெற்­று­விட வேண்­டும் என அக்­கட்­சித் தலை­வர்­கள் மும்­மு­ர­மாக தேர்­தல் பரப்­பு­ரை­களில் ஈடு­பட்­டு­வந்­த­னர்.

அடுத்­த­டுத்து பிர­த­மர் மோடியை வைத்து பல தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­களை நடத்­தி­யது பாஜக.

ஐந்து மாநில சட்­ட­மன்­றத் தேர்­தல்­களில் மேற்கு வங்­கத்­தில்­தான் பிர­த­மர் மோடி அதி­க­மான தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டங்­களை நடத்­தி­னார். மேற்கு வங்­கம் மீது மட்­டும்­தான் பிர­த­மர் மோடி, அமைச்­சர் அமித் ஷா ஆகி­யோ­ரின் முழுக் கவ­ன­மும் இருந்­தது.

ஆனால் மம்தா பானர்­ஜியோ சக்­கர நாற்­கா­லி­யில் உட்­கார்ந்­த­படியே இந்­தத் தேர்­த­லில் வென்று இருக்­கி­றார்.

தேர்­தல் பரப்­பு­ரை­யின்­போது இவரை, அடை­யா­ளம் தெரி­யாத சிலர் தாக்கி கீழே தள்­ளி­விட்­ட­னர். அத­னால், மம்­தா­வுக்கு காலில் அடி­பட்டு சக்­கர நாற்­கா­லி­யில் உட்­கா­ரும் நிலை ஏற்­பட்­டது.

இருந்­தும், அவர் மனம் தள­ரா­மல், சக்­கர நாற்­கா­லி­யில் சென்றே மக்­க­ளைச் சந்­தித்து வாக்­குச் சேக­ரித்து வந்­தார். 66 வய­தா­கும் மம்தா, உள்­ளூர் அர­சி­யல் மற்­றும் கூட்­டாட்சி என இரு கொள்­கை­க­ளுக்­குத் தனது தேர்­தல் பரப்­பு­ரை­யில் முன்­னு­ரிமை கொடுத்­தார்.