கேரளாவில் 90% நோயாளிகள் உருமாறிய கிருமியால் பாதிப்பு

2 mins read
f83210e8-76b4-4f37-b946-17e1cc85fdd7
-

திரு­வ­னந்­த­பு­ரம்: புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிரு­மி­கள் கேரள மாநிலத்­தில் வெகு­வே­க­மா­கப் பரவி வரு­கின்­றன.

அண்­மைய தர­வு­க­ளின்­படி, அங்கு கொரோனா தொற்­றி­யுள்­ளோ­ரில் கிட்­டத்­தட்ட 90 விழுக்­காட்­டி­ன­ரி­டம் உரு­மா­றிய கிரு­மி­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன.

கடந்த ஏப்­ரல் 15ஆம் தேதி­வரை, பிரிட்­ட­னில் உரு­வான உரு­மா­றிய கிருமி, இந்­திய இரட்டை உரு­மாற்­றக் கிருமி ஆகி­ய­வற்­றின் தாக்­கம் 15 முதல் 40 விழுக்­கா­டாக இருந்­தது.

அவ்­வகை கிரு­மி­க­ளால் பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் இருந்து மூன்று பேருக்­குப் பர­வு­வ­தா­கத் தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் 42,464 கொரோனா பாதிப்­பு­களும் 63 கொரோனா மர­ணங்­களும் பதி­வா­கின.

இந்­நி­லை­யில், மருத்­து­வத்­திற்­குப் பயன்­படும் ஆக்­சி­ஜ­னை­யும் அதற்கான சிலிண்­டர்­களை­யும் சட்­ட­வி­ரோ­த­மா­கப் பதுக்கி வைப்போர்­ மீது கடும் நட­வ­டிக்கை பாயும் என கேரள அரசு எச்­ச­ரித்து உள்­ளது.

இன்று முதல் ஒன்­பது நாள்­களுக்கு அங்கு முழு ஊர­டங்கு நடப்­புக்கு வர­வி­ருக்கிறது.

உ.பி.யில் மரணங்கள் இரட்டிப்பு

இத­னி­டையே, உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் 15 மாவட்­டங்­களில் கடந்த மூன்று வாரங்­களில் கொரோனா தொற்­றால் மர­ண­ம் அடைந்­தோர் இரண்டு அல்லது மூன்று மடங்காக உயர்ந்துள்ளதாக 'தி இந்து' செய்தி கூறு­கிறது. லக்னோ, வார­ணாசி, பிர­யாக்­ராஜ், கான்­பூர் ஆகி­யவையே மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள மாவட்­டங்­க­ளா­க நீடிக்­கின்­றன.

மேலும் 36 மாவட்­டங்­களில் கொரோனா பாதிப்பு குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாகச் சொல்­லப்­ப­டு­கிறது. அந்த மாநிலத்­தில் நேற்று முன்­தி­னம் 26,789 பேருக்­குக் கிரு­மித்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது; மேலும் 353 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

ஒடிசாவில் பாதிப்பு 16% அதி­க­ரிப்பு

இவ்­வே­ளை­யில், ஒடிசா மாநி­லத்­தில் புதிய உச்­ச­மாக நேற்று முன்­தி­னம் 12,238 பேருக்கு கொரோனா தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. முந்­திய நாளைக் காட்­டி­லும் இது 16.31% அதி­கம் எனக் கூறப்­பட்­டது. அங்கு கொரோனா பாதிப்பு 12,000க்கு மேல் பதி­வா­கி­யி­ருப்­பது இதுவே முதன்­முறை.