$6 மில்லியன் தண்டத்தொகை செலுத்த ஒருவருக்கு உத்தரவு
கிட்டத்தட்ட $5.3 மில்லியன் (US$4 மி.) லஞ்ச ஊழல் வழக்கில் பிபி என்னும் எண்ணெய் பெருநிறுவனத்தின் முன்னாள் மேலாளருக்கும் ஒரு வர்த்தகருக்கும் தலா 4½ ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிளாரென்ஸ் சாங் பெங் ஹாங், 56, எனப்படும் மேலாளர், கோ செங் லீ, 59, என்னும் வர்த்தகரிடம் இருந்து 2006 ஜூலைக்கும் 2010 ஜூலைக்கும் இடைப்பட்ட காலத்தில் 19 சந்தர்ப்பங்களில் லஞ்சப் பணம் வாங்க ஒத்துக்கொண்டார்.
பிபி நிறுவனத்தில் கோவின் நிறுவனத்துக்குச் சாதகமாக நடந்துகொள்ள இந்த லஞ்சம் தரப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் சிட்டி ஸ்குவேரிலுள்ள மைண்ட்சேம்ப்ஸ் பாலர் பள்ளிக்கு $500,000 லஞ்சம் தரவும் கோ ஒப்புக்கொண்டார்.
சாங்கின் மனைவி இந்தப் பள்ளிக்கூடத்தின் இயக்குநராக உள்ளார்.
ஈராண்டு காலம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் னர் இருவரும் தலா 20 லஞ்ச ஊழல் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கடந்த ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றங்களுக்காக ஒவ்வொருவருக்கும் 54 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சாங்கிற்கு மட்டும் $6 மில்லியனுக்கும் மேல் தண்டத்தொகை செலுத்த உத்தரவிடப்பட்டது.
இந்தத் தொகையைச் செலுத்தத் தவறினால் அவர் கூடுதலாக 28 மாதம் சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சாங்கின் யோசனையைக் கேட்டு 'பசிபிக் பிரைம் டிரேடிங்' என்ற பெயரில் கடல் துறை எண்ணெய் வணிக நிறுவனம் ஒன்றை கோ தொடங்கியதாக விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிறுவனத்திற்கு தாம் பணியாற்றும் பிபி சிங்கப்பூர் நிறுவனத்தில் இருந்து அனுகூலங்களைச் செய்து தரவும் அதற்குக் கைமாறாக கோவின் நிறுவனத்தின் லாபத்தில் பங்கு தரவும் இருவரும் பரஸ்பர ஒப்பந்தம் செய்துகொண்டதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஆனால் இவ்விருவர் இடையி லான பணப் பரிமாற்றம் மைண்ட்சேம்பஸ் பள்ளிக்காகவும் மற்றொரு சொத்துக்காகவும் செய்யப்பட்ட முதலீடு என்று இருவரின் தற்காப்பு வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.
மேலும், இருவரின் செயல் களுக்கும் பிபி சிங்கப்பூர், பசிபிக் பிரைம் டிரேடிங் நிறுவனங்களுக் கும் தொடர்பில்லை என்றும் அவர் களின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத் தில் கூறினர்.
கோ, சாங் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் ஐந்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $100,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
பிணையில் வெளியில் உள்ள இருவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளனர்.

