கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா

கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வரும் கொரோனா

3 mins read
a4a2d6b4-0f31-4fc3-82d4-55a04d046117
-

533 மாவட்டங்களில் 10 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் தொற்றால் பாதிப்பு

ஜெனீவா: இந்­தி­யா­வில் கொரோனா தொற்­றின் இரண்­டா­வது அலை தீவி­ர­மாக பரவி வரு­கிறது. கடந்த வாரம் தின­சரி பாதிப்பு எண்­ணிக்­கை­யா­னது 4 லட்­சத்­திற்­கும் அதி­க­மாக பதி­வா­கி­யுள்­ளது.

நேற்று காலை 8.00 மணி நில­வ­ரப்­படி கடந்த 24 மணி நேரத்­தில் மட்­டும் 3,48,421 கிரு­மித்­தொற்­றுப் பாதிப்பு பதி­வா­கி­யுள்­ளது. 4,205 கொரோனா மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

அதே காலக்­கட்­டத்­தில் 3,55,338 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

மொத்­தம் 2,33,40,938 பேர் தொற்றுப் பாதிப்­புக்கு ஆளா­கி­யுள்­ள­னர். அவர்­களில் 37,04,099 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். 2,54,197 பேர் தொற்­றுப் பாதிப்­பால் பலி­யா­கி­விட்­ட­னர். இது­வரை 1,93,82,642 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த இந்­தி­யா­வின் தமி­ழ­கம் உள்­ளிட்ட பல மாநி­லங்­கள் முடக்­க­நி­லையை அறி­வித்து கட்­டுப்­பா­டு­களைக் கடு­மை­யாக்­கி­யுள்­ளன.

மார்ச் 9ஆம் தேதிக்­குப் பின் நேற்று இரண்­டா­வது நாளாக கிரு­மித்­தொற்­றுக்­குச் சிகிச்சை பெறு­வோர் எண்­ணிக்­கை­யும் புதிய தொற்று எண்­ணிக்­கை­யும் குறைந்­துள்­ளது. எனி­னும் உயி­ரி­ழப்பு அதி­க­ரித்­துள்­ளது.

மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் 41,000 புதிய தொற்­று­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது கடந்த சில வாரங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் கணி­ச­மா­கக் குறைந்­துள்­ளது. கர்­நா­டகா, கேரளா ஆகிய மாநி­லங்­களில் சரா­ச­ரி­யாக 40,000 புதிய தொற்­று­கள் பதி­வாகி வரு­கின்­றன.

தொற்று மர­ணங்­களில் மகா­ராஷ்­டி­ரா­வில் ஆக அதி­க­மாக 800 தொற்று மர­ணங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

தமிழ்­நாடு, டெல்லி, உத்­த­ரப்­பி­ர­தே­சம் மற்­றும் பஞ்­சாப் ஆகிய ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் நாள் ஒன்­றுக்கு 200க்கு மேற்­பட்ட தொற்று மர­ணங்­கள் பதி­வாகி வரு­கின்­றன.

நாட்­டில் 700க்கு மேற்­பட்ட மாவட்­டங்­கள் உள்­ளன. அவற்­றில் 533 மாவட்­டங்­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னோர் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய அரசு தெரி­வித்­த­தாக இண்­டி­யன் எக்ஸ்­பி­ரஸ் இணைய இதழ் தெரி­வித்­தது.

கிரா­மப்­பு­றங்­களை விட்­டு­வைத்­தி­ருந்த கிரு­மித்­தொற்று, இப்­போது அடிக்­கும் இரண்­டா­வது அலை­யில் அங்­கும் அதி­வே­க­மா­கப் பர­வத்­தொ­டங்­கி­யுள்­ளது.

இந்த அள­வுக்கு தொற்று வேக­மாகப் பர­வு­வ­தற்கு முக்­கி­ய­மான கார­ணம், இந்­தி­யா­வில் உரு­மாற்­றம் அடைந்த கிரு­மித்­தொற்று எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

சீனா­வின் வூஹான் நக­ரில் முதன்­மு­த­லில் உரு­வா­ன­தா­கக் கூறப்­படும் 'கொவிட்-19' தொற்று உலக நாடு­க­ளுக்­குப் பரவி உல­கத்­தையே முடக்­கிப்போட்­டுள்ள நிலை­யில் இப்­போது உரு­மா­றிய கொவிட்-19 தொற்று உலக நாடு­க­ளுக்­குப் பெரும் அச்­சு­றுத்­த­லை­யும் நெருக்­க­டி­யை­யும் தந்­துள்­ளது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வில் பர­வ­லா­கக் காணப்­படும் உரு­மா­றிய கொரோனா தொற்று உல­க­ள­வில் 44 நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ள­தாக உலக சுகா­தார அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் கொரோனா தொற்று வேக­மா­கப் பர­வு­வ­தற்கு முக்­கி­யக் கார­ணம் பி.1.617 எனும் உரு­மாறிய கொரோனா தொற்­று­தான். இது 2020 அக்­டோ­பர் மாதம் இந்­தி­யா­வில் முதன்­மு­த­லில் கண்­ட­றி­யப்­பட்­டது.

"இந்த கிரு­மி­தான் இப்­போது உலக சுகா­தார அமைப்­பின் 6 மண்­ட­லங்­களில் உள்ள 44 நாடு­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

"இது­வரை 4,500 மாதி­ரி­களில் உரு­மா­றிய நுண்­ணு­யிர்த்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தாக உலக சுகா­தார அமைப்பு ஓர் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

"இந்­தி­யா­வைத் தவிர்த்து 'பி.1.617' உரு­மா­றிய கொரோனா தொற்று பிரிட்­ட­னில்­தான் அதி­க­மா­கக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது," என உலக சுகா­தார அமைப்­பின் அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தி­யா­வில் பரவி வரும் பி.1.617 வகை உரு­மா­றிய கொரோனா, மற்ற நுண்­ணு­யிர்த் தொற்­று­க­ளைக் காட்­டி­லும் வேக­மா­கப் பர­வும் தன்மை கொண்­டது என்று முன்­ன­தாக அந்த அமைப்பு தெரி­வித்­தி­ருந்­தது.