ஊரடங்கால் ரயில் நிலையங்களில் கூட்டம்

ஊரடங்கால் ரயில் நிலையங்களில் கூட்டம்

1 mins read
756d5fda-8d99-4ebb-b286-baaa8f126f9f
தெலுங்கானா மாநிலத்தில் நேற்று முதல் ஊரடங்கு விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தின் செகந்தராபாத் நகரின் ரயில் நிலையத்தில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்குக் காத்திருக்கின்றனர் இவர்கள். படம்: ஏஎஃப்பி -

ஹைத­ரா­பாத்: கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் தெலுங்­கானா மாநி­லத்­தில் நேற்று முதல் மே 21ஆம் தேதி வரை ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கடந்த ஏப்­ரல் 20ஆம் தேதி முதல் தெலுங்­கா­னா­வில் இரவு நேர ஊர­டங்கு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

ஊர­டங்கு நாட்­களில் தின­மும் காலை­யில் 6 மணி முதல் 10 மணி வரை மக்­க­ளின் அனைத்­துச் செயல்­பா­டு­க­ளுக்­கும் அனு­மதி அளிக்­கப்­படும்.

மற்­ற­படி, ஊர­டங்கு காலத்­தில் அத்­தி­யா­வ­சிய சேவை­க­ளுக்கு மட்­டும் கட்­டுப்­பாட்­டுத் தளர்வு அளிக்­கப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­டது. ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­ட­தால் நகர்ப்­பு­றங்­களில் தங்கி வேலை செய்­து­வ­ரும் வெளி­யூர்க்­கா­ரர்­கள் தங்­கள் சொந்த ஊர்­க­ளுக்­குச் செல்­வ­தற்­காக பேருந்து நிலை­யங்­க­ளி­லும் ரயில் நிலை­யங்­களில் ஊர­டங்கு விதிக்­கப்­பட்ட முதல் நாளில் குவிந்­த­னர்.

அவர்­களில் பலர் கைக்­கு­ழந்­தை­க­ளு­ட­னும் தங்­கள் பய­ணப் பெட்­டி­க­ளு­ட­னும் ரயில் நிலை­யங்­களில் நெடு­நே­ரம் காத்­தி­ருந்து அவ­திக்கு ஆளா­கி­னர்.

தடுப்­பூ­சி­களை வெளி­நா­டு­களில் இருந்து கொள்­மு­தல் செய்­வ­தற்­கான ஒப்­பந்­தப்­புள்ளி கோர­வும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் முடி­வு­செய்­யப்­பட்­ட­தா­க­வும் முதல்­வர் அலு­வ­ல­கம் வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.