கர்நாடகாவில் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்

கர்நாடகாவில் ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்

1 mins read
81554a28-7da6-4751-949d-40c36f56844c
-

பெங்­க­ளூர்: கர்­நா­ட­கா­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­படு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை நாளொன்­றுக்கு 40 ஆயி­ரத்­துக்­கும் மேல் பதி­வாகி வரு­கிறது. இத­னால் மருத்­து­வ­ம­னை­களில் படுக்­கை­கள் தட்­டுப்­பாடு, ஆக்­சி­ஜன் பற்­றாக்­குறை உள்­ளிட்­டவை ஏற்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் முதல்­வர் எடி­யூ­ரப்பா பெங்­க­ளூ­ரு­வில் நேற்று ஆக்­சி­ஜன் பேருந்து சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­னார்.

பின்­னர் எடி­யூ­ரப்பா கூறும்­போது, "கொரோ­னா­தொற்­றின் பாதிப்­பால் ஆக்­சி­ஜன்­தேவை அதி­க­ரித்­துள்­ளது. ஆக்­சிஜன் பற்­றாக்­கு­றை­யால் கர்­நா­ட­கா­வில் கொரோனா மர­ணங்­கள் அதி­கம். எனவே இனி அத்­த­கைய சம்­ப­வங்­கள் நிக­ழா­மல் தடுக்­கும் வகை­யில் ஆக்­சி­ஜன் பேருந்­துச் சேவை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது," என்றார்.