2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை

2 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு தடுப்பூசி பரிசோதனை

1 mins read
7714db77-4260-429a-a26e-1d8d867a0c0b
-

புதுடெல்லி: இரண்டு வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு கோவாக்ஸின் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்தி 2-வது மற்றும் 3-வது கிளினிக்கல் பரிசோதனை நடத்திக்கொள்ள பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) அனுமதி வழங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிசோதனைகள் டெல்லி எய்ம்ஸ், பாட்னா எய்ம்ஸ், நாக்பூர் எம்ஐஎம்சி மருத்துவமனை உள்ளிட்ட 525 இடங்களில் இந்த நிறுவனம் 2வது கட்டம் மற்றும் 3வது கட்ட பரிசோதனைகளை நடத்திக்கொள்ள இந்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் வல்லுநர் குழு அனுமதியளித்துள்ளது.