கொரோனா நெருக்கடியால் மோடி செல்வாக்கு சரிந்தது

கொரோனா நெருக்கடியால் மோடி செல்வாக்கு சரிந்தது

1 mins read
603bd5ee-78bb-48f7-b82b-2841b0ffafeb
-

புது­டெல்லி: கொரோனா விவ­கா­ரத்தை முறை­யாக கையா­ளத் தவ­றி­ய­தால், மக்­களிடம் பிர­த­மர் மோடி­யின் செல்­வாக்கு சரிந்­துள்­ள­தாக அமெ­ரிக்க நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில் தெரியவந்­துள்­ளது. தொற்று 2வது அலை­யில் உல­கி­லேயே அதிகம் பாதிக்­கப்­பட்ட நாடாக இந்­தியா உள்­ளது. மருத்­து­வ­ம­னை­யில் இட­மில்லை, ஆக்­சி­ஜன், வென்­டி­லேட்­டர் பற்றாக்குறையால் பலர் தங்­கள் அன்புக்குரியவர்களின் இறப்பை கண்­கூ­டாக பார்க்­கின்­ற­னர். நிலைமை மோச­மா­ன­தற்கு, முன்கூட்டியே நிபு­ணர்­கள் விடுத்த எச்­ச­ரிக்­கையை பாஜக அரசு செவிமடுக்காததுதான். இத­னால்­தான் சட்­டமன்றத் தேர்­தல்­களில் பாஜக பெரும் ஏமாற்­றத்தை சந்­தித்­துள்­ளது.

இந்­த­நி­லை­யில், அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 'மார்­னிங் கன்­சல்ட்' என்ற நிறு­வ­னம் 'குளோ­பல் லீடர்ஸ்' பட்­டி­யலில் உள்ள பிர­த­மர் மோடி­யின் செல்­வாக்கு குறித்த கணிப்பை வெளி­யிட்­டுள்­ளது.