இரண்டாவது நாளாக 4,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

இரண்டாவது நாளாக 4,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

1 mins read
fe5f18ba-916a-476e-88cb-a2f78789dbd4
-

இந்தியா, இரண்டாவது நாளாக 4,000க்கும் அதிகமான கொவிட்-19 மரணங்களைப் பதிவு செய்துள்ளது. கிருமித்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை நான்காவது நாளாக 400,000க்குக் குறைவாக உள்ளது.

இந்த எண்ணிக்கை எப்போது உச்சத்தைத் தொடும் என்பது குறித்து நிபுணர்கள் உறுதியாக இல்லை என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொற்றுநோய் பேராசிரியர் டாக்டர் பிரமர் முகர்ஜி தெரிவித்தார்.

இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் நிலைமை கடுமையாக உள்ளது. அந்நாட்டின் நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 362, 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.