20 மாநிலங்களில் தொற்று குறையும் அறிகுறிகள்

20 மாநிலங்களில் தொற்று குறையும் அறிகுறிகள்

1 mins read
1a34052b-55bc-4e77-8ff1-b592ca01aeae
-

புது­டெல்லி: இரு­பது மாநி­லங்­களில் கிரு­மித்­தொற்­றுப் பர­வல் குறை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டு­கின்­றன என்று மத்­திய அரசு வட்­டா­ரங்­கள் தெரி­விப்­ப­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

எனி­னும் மகா­ராஷ்­டிரா, தமி­ழ­கம், பீகார் உள்­ளிட்ட மாநி­லங்­களில் ஊர­டங்கு அம­லுக்கு வந்­துள்­ளது. மேலும் சில மாநி­லங்­களில் கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­பட்­டுள்­ளன.

பீகா­ரில் ஊர­டங்கு உத்­த­ரவு மே 25ஆம் தேதி வரை நீட்­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கேர­ளா­வில் புதன்­கி­ழமை ஒரே நாளில் 43,529 பேருக்கு கிருமி தொற்­றி­யுள்­ளது. 95 பேர் பலி­யாகி­விட்­ட­னர். அங்கு ஒட்­டு­மொத்த பலி எண்­ணிக்கை 6,053ஆக கூடி­யுள்­ளது.

டெல்­லி­யில் நேற்று காலை நில­வ­ரப்­படி, புதி­தாக 10,489 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நிலை­யில், 308 உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

கர்­நா­ட­கா­வில் தற்­போது சிகிச்சை பெற்று வரு­வோர் எண்­ணிக்கை 592,182ஆக கூடி­யுள்­ளது. இதன் மூலம் மகா­ராஷ்­டி­ராவை (546,129) முந்­தி­யுள்­ளது. அங்கு 18 முதல் 44 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு தடுப்­பூசி பணி தற்­கா­லி­க­மாக நிறுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் 12 மாநி­லங்­களில் கொரோ­னா­வுக்கு சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை ஒரு லட்­சத்­தை­விட அதி­க­மாக உள்­ளது என சுகா­தார அமைச்­சின் இணைச் செய­லா­ளர் லாவ் அகர்­வால் தெரி­வித்­துள்­ளார்.

எட்டு மாநி­லங்­களில் நோயாளி­களின் எண்­ணிக்கை 50 ஆயி­ரத்தை விட சற்று அதி­க­மாக உள்­ளது என்று அவர் கூறி­யுள்­ளார். இதே வேளை­யில் 187 மாவட்­டங்­களில் கொரோனா தொற்று குறைந்து வரு­வ­தாக புள்ளி விவ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன என்­றும் அவர் சுட்­டிக்­காட்டி உள்­ளார்.