தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு: இந்திய அரசு நடவடிக்கை

தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு: இந்திய அரசு நடவடிக்கை

3 mins read
d8ed2e26-5632-4e07-9a83-0026963e61fd
மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள். நாடு முழுவதும் இதுவரை 177 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.படம்: ஏஎஃப்பி -

50 ஊழியர்களுக்குத் தொற்று என பாரத் பயோடெக் நிறுவன இயக்குநர் தகவல்

மும்பை: எதிர்­வ­ரும் ஆகஸ்ட் மாதத்­துக்­குள் கோவி­ஷீல்டு தடுப்­பூசி உற்­பத்­தி­யா­னது 100 மில்­லி­ய­னாக அதி­க­ரிக்­கும் என சீரம் இந்­தியா நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது. இத்­த­க­வலை அந்­நி­று­வ­னத்­தின் ஒழுங்­கு­முறை விவ­கா­ரங்­க­ளுக்­கான இயக்­கு­நர் பிர­காஷ் குமார் சிங் தெரி­வித்­துள்­ளார்.

இதே­வே­ளை­யில் கோவாக்­சின் தடுப்­பூசி உற்­பத்­தி­யா­னது 80 மில்­லி­ய­னாக உய­ரும் என்று பாரத் பயோ­டெக் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது. மேலும், செப்­டம்­பர் மாத­மும் இதே அள­வில் உற்­பத்தி தொட­ரும் என இரு நிறு­வ­னங்­களும் தெரி­வித்­துள்­ளன.

2 முதல் 18 வய­துள்ள பிரி­வி­ன­ருக்கு கோவாக்சின் தடுப்­பூசி செலுத்­து­வது தொடர்­பான அடுத்­த­கட்ட பரி­சோ­த­னை­களை மேற்­கொள்ள மத்­திய அரசு அனு­மதி வழங்­கி­யுள்­ளது. முதற்­கட்­ட­மாக பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­துக்கு மத்­திய மருந்­துத் தரக்­கட்­டுப்­பாட்டு அமைப்பு அனு­மதி வழங்­கி­யுள்­ள­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' செய்தி தெரி­விக்­கிறது.

நாடு முழு­வ­தும் தடுப்­பூசி தட்­டுப்­பாடு நில­வு­வ­தாக ஊட­கங்­களில் அவ்­வப்­போது தக­வல்­கள் வெளி­யாகி வரு­கின்­றன. இதை­ய­டுத்து தடுப்­பூசி உற்­பத்­தியை அதி­க­ரிக்க மத்­திய அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

இந்­நி­லை­யில் பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் கோவாக்­சின் தடுப்­பூசி உற்­பத்­தி­யா­னது ஜூலை­யில் 30.30 கோடி­யாக இருக்­கும் என்­றும் ஆகஸ்ட் மாதம் இந்த எண்­ணிக்கை 70.82 மில்­லி­ய­னாக இருக்­கும் என்­றும் பாரத் பயோ­டெக் நிறு­வ­ன இயக்­கு­நர் கிருஷ்­ண­மோ­கன் தெரி­வித்­துள்­ளார்.

இதற்­கி­டையே சீரம், பாரத் பயோ­டெக் நிறு­வ­னங்­கள் வெளி­நா­டு­க­ளு­டன் செய்­து­கொண்ட ஒப்­பந்­தங்­க­ளின் கார­ண­மா­கவே 60.60 மில்­லி­யன் தடுப்­பூ­சி­கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­ட­தாக பாஜக தெரி­வித்­துள்­ளது.

இந்­திய குடி­மக்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடா­மல் வெளி­நா­டு­க­ளுக்­குப் பல கோடி தடுப்­பூ­சி­களை மத்­திய அரசு ஏற்­று­மதி செய்­ததை ஏற்க இய­லாது என எதிர்க்­கட்­சி­கள் குற்­றம் சாட்­டி­யுள்­ளன.

இந்­நி­லை­யில் பாஜக செய்­தித் தொடர்­பா­ளர் சம்­பிட் பத்ரா விளக்­க­ம­ளித்­துள்­ளார்.

சீரம் நிறு­வ­னம் உற்­பத்தி செய்­யும் கோவி­ஷீல்டு தடுப்­பூ­சி­யின் அறி­வு­சார் சொத்­து­ரிமை வெளி­நாட்­டைச் சேர்ந்த அஸ்ட்­ரா­ஸெ­னகா நிறு­வ­னத்­தி­டம் உள்­ளது. எனவே சீரம் நிறு­வ­னம் உற்­பத்தி செய்­யும் தடுப்­பூ­சி­களில் ஒரு பகு­தியை வெளி­நா­டு­க­ளுக்­குக் கொடுக்­க­வேண்­டிய கடமை உள்­ளது என்று சம்­பிட் பத்ரா சுட்­டிக்­காட்டியுள்ளார்.

இரு நிறு­வ­னங்­க­ளுமே தடுப்­பூசி உற்­பத்­திக்­குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை கொள்­மு­தல் செய்­த­போது கையெ­ழுத்­திட்ட ஒப்­பந்­தங்­க­ளின்­படி வெளி­நா­டு­க­ளுக்கு குறிப்­பிட்ட அள­வி­லான தடுப்­பூ­சி­க­ளைத் தர­வேண்டி உள்­ளது என்­றும் சம்­பிட் பத்ரா விவ­ரித்­துள்­ளார்.

இவ்­வி­ஷ­யத்­தில் எதிர்க்­கட்­சி­யி­னர் தவ­றான பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக அவர் சாடி­னார்.

இதற்­கி­டையே தங்­கள் நிறு­வ­னம் குறித்து பிர­த­ம­ரி­டம் சில தரப்­பி­னர் புகார் அளித்­தி­ருப்­பதை அறிந்­த­போது தமது நெஞ்­சம் சித­றுண்டு போன­தாக பாரத் பயோ­டெக் நிறு­வ­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் சுசித்ரா தெரி­வித்­துள்­ளார்.

குறை­வான பணி­யா­ளர்­கள், முழு­நேர ஊர­டங்கு உள்­ளிட்ட பல சவால்­க­ளுக்கு மத்தியில், மருந்து உற்­பத்­தி­யில் நிறு­வ­னம் ஈடு­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­யுள்­ளார்.

மேலும், நிறு­வ­னப் பணி­யா­ளர்­களில் ஐம்­ப­துக்­கும் மேற்­பட்­டோர் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்டு விடு­மு­றை­யில் உள்­ள­னர் என்­றும் குறை­வான பணி­யா­ளர்­க­ளு­டன் 24 மணி நேர­மும் தடுப்­பூசி மருந்து உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­தா­க­வும் அவர் மேலும் கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே இரு தடுப்­பூ­சி­க­ளுக்கு மத்­தி­யில் 12 முதல் 16 வாரங்­கள் இடை­வெளி இருப்­பது நல்­லது என நிபு­ணர்­கள் கூறியுள்ளனர். இந்நிலையில், தொற்றில் இருந்து மீண்டவர்களும் கூட, ஆறு மாதங்களுக்குப் பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ரஷ்யாவிடம் இருந்து 150,000 'ஸ்புட்னிக்-வி' தடுப்பூசிகள் இன்று இந்தியா வந்தடையக்கூடும்.