மரபுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் ஆளுநர்: முதல்வர் மம்தா கடும் கண்டனம்

மரபுகளுக்கு எதிராகச் செயல்படுகிறார் ஆளுநர்: முதல்வர் மம்தா கடும் கண்டனம்

1 mins read
8a8e948c-f0d7-464f-a75a-24faefcd13a8
-

கோல்­கத்தா: மேற்கு வங்க மாநி­லத்­தில் அண்­மை­யில் நடந்து முடிந்த சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லுக்­குப் பிறகு வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்த பகு­தி­க­ளைப் பார்­வை­யிட அம்­மா­நில ஆளு­ந­ருக்கு எதிர்ப்பு கிளம்­பி­யுள்­ளது.

இந்த வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளின்­போது 14 பேர் பலி­யா­கி­னர். இது­கு­றித்து பாஜக புகார் எழுப்­பி­யி­ருந்­தது.

இந்­நி­லை­யில் வன்­முறை பாதித்த பகு­தி­க­ளைப் பார்­வை­யி­டப் போவ­தாக ஆளு­நர் ஜக்­தீப் தாங்­கர் அறி­வித்­தார்.

இதற்கு திரி­ணா­முல் காங்­கிரஸ் கட்சி கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.

ஆளு­நர் பொறுப்­பில் இருக்­கும் ஒரு­வர் இது­வரை இத்­த­கைய ஆய்­வு­களை மேற்­கொண்­ட­தில்லை என்­றும் இந்த வழக்­கம் இதற்கு முன்பு இல்லை என்­றும் அக்­கட்சி எம்பி கல்­யாண் பந்­தோ­பாத்­யாய் தெரி­வித்­துள்­ளார்.

பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் நில­வும் அமை­தியைச் சீர்­கு­லைப்­ப­து­தான் ஆளு­ந­ரின் நோக்­கமா என்­றும் அவர் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இந்­நி­லை­யில் ஆளு­நர் ஜக்­தீப் தாங்­க­ருக்கு எழு­தி­யுள்ள கடி­தம் ஒன்­றில், ஆளு­நர் எடுத்­துள்ள தன்­னிச்­சை­யான முடி­வா­னது நீண்­ட­கா­ல­மாக நடை­மு­றை­யில் இருக்­கும் மர­பு­க­ளுக்கு எதி­ரா­னது எனக் குறிப்­பிட்­டுள்­ளார் முதல்­வர் மம்தா பானர்ஜி.

எனவே, விதி­மு­றை­க­ளுக்­குப் புறம்­பாக செயல்­ப­டு­வ­தை­யும் கள ஆய்வு தொடர்­பாக திடீர் முடி­வு­கள் எடுப்­ப­தைத் தவிர்க்க வேண்­டும் என்­றும் அவர் தமது டுவிட்­டர் பதிவு ஒன்­றில் வலி­யு­றுத்தி உள்­ளார்.