பிரியங்கா: தடுப்பூசிகள் வழங்க அரசு தவறிவிட்டது

பிரியங்கா: தடுப்பூசிகள் வழங்க அரசு தவறிவிட்டது

1 mins read
71985cea-46c4-41f8-8eb0-be94dafb5c94
-

லக்னோ: மாநிலங்களுக்குப் போதிய தடுப்பூசிகள் வழங்க மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி புகார் எழுப்பி உள்ளார்.

கடந்த 30 நாட்களில் மட்டும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 82 விழுக்காடு அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

"அமெரிக்கா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் இந்திய நிறுவனங்களிடம் நீண்ட காலத்துக்கு முன்பே 'ஆர்டர்' கொடுத்து விட்டன. ஆனால், இந்திய அரசு இத்தகைய நடவடிக்கைகளை கடந்த ஜனவரி மாதம்தான் தொடங்கியது," என்று பிரியங்கா காந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

"கொரோனா நெருக்கடி யால் உருவான அடிப்படைப் பிரச்சினைகளே இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்த பெருந்தொற்றில் எவ்வளவு காலம் மத்திய அரசின் கொடுமையை குடிமக்கள் தாங்குவது?," என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.