ரூ.6.22 லட்சம் கோடி: தாயகம் அனுப்பிய இந்தியர்கள்

ரூ.6.22 லட்சம் கோடி: தாயகம் அனுப்பிய இந்தியர்கள்

1 mins read
1b117695-dce6-40fa-a267-9f709cd32922
-

புது­டெல்லி: கொரோனா கால­கட்­டத்­தின் போதும் வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் தாய­கத்­திற்கு 6.22 லட்­சம் கோடி ரூபாய் அனுப்­பி­யுள்­ள­னர்.

உலக வங்கி வெளி­யிட்ட அறிக்­கை­யில் இத்­த­க­வல் இடம்­பெற்­றுள்­ளது.

அண்­மை­யில் அந்த வங்கி வெளி­யிட்ட அறிக்­கை­யில், கடந்த 2020ஆம் ஆண்டு வெளி­நாடு வாழ் இந்­தி­யர்­கள் 6.22 லட்­சம் கோடி ரூபாயை இந்­தி­யா­வுக்கு அனுப்பி உள்­ள­னர் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தத் தொகை­யா­னது 2019ல் அனுப்­பிய 6.24 லட்­சம் கோடி ரூபாயை விட 0.2 விழுக்­காடு மட்­டுமே குறை­வா­கும்.

ஐக்­கிய அமீ­ரக சிற்­ற­ர­சில் பணி­பு­ரி­யும் இந்­தி­யர்­கள் கடந்­தாண்டு அனுப்­பிய தொகை­யில் முந்­தைய ஆண்டை விட 17 விழுக்­காடு சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

அதே­ச­ம­யம் அமெ­ரிக்­கா­வில் இருந்து அனுப்­பப்­படும் தொகை அதி­க­ரித்­துள்­ளது.