கறுப்புப் பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி

கறுப்புப் பூஞ்சை நோய்க்கு 52 பேர் பலி

1 mins read
e9e51627-1f47-45b5-8b21-9bc160ed37cb
-

மும்பை: கறுப்­புப் பூஞ்சை நோய்த்­தாக்­கத்­தால் மகா­ராஷ்­டி­ரா­வில் 52 பேர் பலி­யாகி உள்­ள­தாக தினத்­தந்தி நாளேடு செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில் கறுப்­புப் பூஞ்சை நோய் குறித்து யாரும் அஞ்­சத் தேவை­யில்லை என்­றும் அதி­லி­ருந்து விரை­வில் குண­மடைய முடி­யும் என்­றும் மத்­திய சுகா­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பர­வல் மெல்ல கட்­டுக்­குள் வரத் தொடங்கி உள்­ளது. இந்­நி­லை­யில் கொவிட்-19 பாதிப்­புக்­காக சிகிச்சை பெறு­வோ­ருக்­கும் குண­ம­டைந்­த­வர்­க­ளுக்­கும் கறுப்­புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்­ப­டு­வ­தா­கக் கூறப்­படு­கிறது.

சிகிச்­சை­யின்­போது உட்­கொள்­ளும் சில மருந்­து­க­ளால் உட­லில் நோய் எதிர்ப்­புச் சக்தி குறைந்து இந்­தப் பூஞ்சை நோய் தாக்­கம் ஏற்­ப­டு­வ­தாக சிலர் கூறு­கின்­ற­னர். மகா­ராஷ்­டி­ரா­வில்­தான் பூஞ்சை நோயால் தாக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. அங்கு இரண்­டா­யி­ரத்­திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிப்­புக்கு ஆளான நிலை­யில் 52 பேர் நோய்க்­குப் பலி­யாகி விட்­ட­னர்.

இதற்கிடையே நாடு முழுவதும் நேற்று முன்தினம் புதிதாக 326,098 பேருக்கு கிருமி தொற்றியது. 3,890 பேர் பலியாகிவிட்டனர். 36,73,802 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் புதிதாக 45,183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.