சுவாசக் கருவிகள்: கஜகஸ்தான் உதவி

சுவாசக் கருவிகள்: கஜகஸ்தான் உதவி

1 mins read
8b4d4f48-07fd-40a1-a08f-8b61d92cbbe8
-

புது­டெல்லி: கஜ­கஸ்­தான் நாட்­டி­லி­ருந்து 750,000 சுவா­சக் கரு­வி­கள் இந்­தி­யா­வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அவை கொரோனா சிகிச்சைக்குப் பயன்­படும் என மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இக்­கட்­டான வேளை­யில் 40க்கும் மேற்­பட்ட உலக நாடு­கள் இந்­தி­யா­வுக்கு உத­விக்­க­ரம் நீட்­டி­யுள்­ளன. அவற்­றுள் மத்­திய ஆசிய நாடு­க­ளுள் ஒன்­றான கஜ­கஸ்­தா­னும் அடங்­கும்.

அந்­நாடு ஏற்­கெ­னவே இந்­தி­யா­வுக்கு 5.6 மில்­லி­யன் சுவா­சக் கரு­வி­களை அனுப்பி வைத்­துள்­ளது. இந்­நி­லை­யில் நேற்று மேலும் 750,000 சுவா­சக் கரு­வி­களை இந்­தி­யா­வுக்கு அனுப்பி உள்­ளது.

தவிர 105 வென்­டி­லேட்­டர்­களும் அனுப்­பப்­பட்­டுள்­ளன என்­றும் 'ரெஸ்­பி­ரேட்­டர்' எனப்­படும் சுவா­சக் கரு­வி­கள் கொரோனா சிகிச்­சைக்கு கைகொ­டுக்­கும் என்­றும் மருத்­துவ நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே உயிர்­வாயு உற்­பத்­திக்­கூட ஒதுக்­கீட்­டில் நியா­யத்­தைக் கடை­ப்பி­டிக்க வேண்­டும் என மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி கூறி­உள்­ளார்.

மேற்கு வங்­கத்­தில் உள்ள மருத்துவ­ம­னை­க­ளுக்கு உயிர்வாயு உற்­பத்­திக் கூடங்­களை ஒதுக்­கீடு செய்ய மத்­திய அரசு தயங்­கு­வது வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

"இது தொடர்­பான முன்­னு­ரிமை மாற்றி அமைக்­கப்­ப­டு­கிறது. மேற்கு வங்­கத்­துக்­கான ஒதுக்­கீடு நாளுக்கு நாள் குறைக்­கப்­ப­டு­கிறது. எனவே, இது­தொ­டர்­பான நட­வ­டிக்­கை­க­ளில் அனைத்து மட்­டத்­தி­லும் நியா­ய­மும் வேக­மும் வேண்­டும்," என்று மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.