'உயிரிழந்தோர் கண்ணியத்தை காக்க வேண்டும்'

'உயிரிழந்தோர் கண்ணியத்தை காக்க வேண்டும்'

1 mins read
1b395e40-32ab-4767-958d-840e8b6f558f
-

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் உயிரிழப்போரின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கான சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் அந்த ஆணையம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவால் இறந்தவர் களின் உடல்கள் எவ்வாறு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பான மத்திய, மாநில அரசுகளின் நெறிமுறைகள் மீறப்படுவதாகவும் இது இறந்தவர்களை அவமானப்படுத்துவதற்குச் சமம் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து உயிரிழந் தோரின் உடல்களை மிகுந்த கண்ணியத்துடன் அடக்கம் செய்ய வேண்டும், அவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும், மருத்துவ மனைக்குரிய சிகிச்சைக் கட்டணத் தொகையில் நிலுவை இருந்தால் உடலை ஒப்படைக்க மறுக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமே முன்வந்து மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

இந்தப் பரிந்துரைகளை அடுத்த நான்கு வாரங்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.