கிராமங்களில் வீடு வீடாகச் சோதனை நடத்த மோடி உத்தரவு

கிராமங்களில் வீடு வீடாகச் சோதனை நடத்த மோடி உத்தரவு

2 mins read
68ad661e-5575-4135-a70d-87d2181471cd
பிரதமர் மோடி. படம்: ஊடகம் -

புது­டெல்லி: கொரோனா பாதிப்பு எண்­ணிக்கை அதி­க­மாக இருந்­தா­லும் அழுத்­தத்­துக்கு ஆளா­கா­மல் உண்மை நில­வ­ரத்தை மாநில அர­சு­கள் வெளிப்­ப­டை­யாக தெரி­விக்க வேண்­டும் என பிர­த­மர் மோடி வலி­யு­றுத்தி உள்­ளார்.

இதற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அதி­கா­ரி­கள் மேற்­கொள்ள வேண்­டும் என அவர் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

மேலும், கிரா­மப்­பு­றங்­களில் வீடு வீடா­கச் சென்று அதி­கா­ரி­கள் சோதனை நடத்தி உண்மை நில­வ­ரத்­தைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் பிர­த­மர் மோடி ஆலோ­சனை வழங்கி உள்­ளார்.

நாடு முழு­வ­தும் கொரோனா கிரு­மித்­தொற்­றால் நாள்­தோ­றும் சரா­ச­ரி­யாக 400,000 பேர் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள். கிரா­மப்­பு­றங்­க­ளுக்­கும் தொற்று பர­வி­யுள்­ளது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் பல்­வேறு அமைச்­சு­க­ளைச் சேர்ந்த உய­ர­தி­கா­ரி­க­ளு­டன் பிர­த­மர் மோடி ஆலோ­சனை மேற்­கொண்­டார். அப்­போது, பாதிப்பு அதி­கம் உள்ள மாவட்­டங்­களில் உள்­ளூர் அள­வில் கட்­டுப்­பா­டு­கள் பின்­பற்­றப்­பட வேண்­டி­யது இந்த நேரத்­தின் தேவை என்று பிர­த­மர் மோடி குறிப்­பிட்­ட­தாக 'தினத்­தந்தி' நாளேட்­டுச் செய்தி தெரி­விக்­கிறது.

மேலும், கொரோனா பரி­சோ­தனை எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­திய அவர், கிரா­மப்­பு­றங்­களில் தொற்­றுப் பர­வு­வது கவலை தரு­கிறது என்­றார்.

"கிரா­மங்­களில் வீடு வீடாக சோதனை நடத்­து­வ­து­டன் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யி­லும் ஈடு­பட வேண்­டும்," என்­றார் பிர­த­மர் மோடி.

கிரா­மப்­பு­றங்­களில் தத்­தம் வீடு­க­ளி­லேயே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு சிகிச்சை பெறு­வது தொடர்­பாக விளக்­கப் படங்­க­ளு­டன் எளி­தான மொழி­யில் மக்­க­ளுக்கு வழி­காட்­டு­தல்­களை வழங்­க­வேண்­டும் என்று அவர் கேட்­டுக் கொண்­டார்.

மேலும் மத்­திய அரசு வழங்­கிய செயற்கை சுவா­சக் கரு­வி­களை (வென்­டி­லேட்­டர்) சில மாநி­லங்­கள் சரி­வர பயன்­ப­டுத்­தா­மல் கிடப்­பில் போட்­டி­ருப்­ப­தாக வெளி­வந்­துள்ள தக­வ­லின் பேரில் அதி­கா­ரி­கள் உட­னடி ஆய்வு மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அவர் உத்­த­ர­விட்­டார்.

"கொரோ­னா­வுக்கு எதி­ரான இந்­தி­யா­வின் போராட்­டம் நீடிக்­கிறது. இது விஞ்­ஞா­னி­க­ளா­லும் துறை வல்­லு­நர்­க­ளா­லும் வழி­ந­டத்­தப்­ப­டு­கிறது. இந்­தப் போராட்­டம் தொட­ரும்," என்றார் பிர­த­மர் மோடி.

'கொரோனாவுக்கு எதிரான போரை விஞ்ஞானிகள், துறை வல்லுநர்கள் வழிநடத்துகிறார்கள்'