கோல்கத்தா: கொரோனா கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 15 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
அங்கு நேற்று முன்தினம் ஒரேநாளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 136 பேர் பலியாகிவிட்டனர். இதையடுத்து அங்கு 15 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
இக்காலகட்டத்தில் அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பேரங்காடிகள், மதுக்கூடங்கள், அழகு நிலையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும். வாகனப் போக்குவரத்து அனுமதிக்கப்படாது. ரயில்கள் இயக்கப்படாது.
மின்வணிகம், வீடுகளுக்கான அத்தியாவசியப் பொருட்கள் விநியோகச் சேவை மட்டும் அனுமதிக்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சட்டீஸ்கர் மாவட்டத்திலும் மே 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்கெனவே கடந்த 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி இரவு வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

