முட்டை திருடிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

முட்டை திருடிய தலைமைக் காவலர் பணியிடை நீக்கம்

1 mins read
ddd52aac-ebaf-4103-90d6-05341fd7714c
முட்டை திருடியபோது எடுக்கப்பட்ட காணொளி. படம்: ஊடகம் -

சண்­டி­கர்: சாலை­யோ­ரம் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தில் இருந்து முட்­டை­க­ளைத் திரு­டிய தலை­மைக் காவ­லர் பணி­யிடை நீக்­கம் செய்­யப்­பட்­டார்.

பஞ்­சாப் மாநி­லம் சண்­டி­க­ரைச் சேர்ந்­த­வர் பிரித்­பால் சிங். காவல்­து­றை­யில் தலை­மைக் காவ­ல­ரா­கப் பணி­யாற்­றிய அவர், நேற்று முன்­

தி­னம் பதே­தார் பகு­தி­யில் போக்­கு­

வ­ரத்து ஒழுங்­கு­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­தார்.

அப்­போது சாலை­யோ­ரம் நின்­றி­ருந்த ஒரு முச்­சக்­கர வாக­னம் அருகே சென்ற அவர், அதில் அடுக்கி வைக்­கப்­பட்­டி­ருந்த முட்­டை­களில் இருந்து சில­வற்றை எடுத்து தமது கால்­சட்­டைப் பையில் திணித்­தார்.

அவர் முட்­டை­ திரு­டு­வதை கைபே­சி­யில் காணொ­ளி­யா­கப் பதிவு செய்த ஒரு­வர் பின்­னர் சமூக வலைத்­த­ளத்­தில் அதை வெளி­யிட, பிரித்­பால் சிங்­கின் செய­லுக்கு பலர் கண்­ட­னம் தெரி­வித்­த­னர். இதை

­ய­டுத்து நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவர் பணியிடை ­நீக்­கம் செய்­யப்­பட்டார்.