25 நாள்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு

25 நாள்களுக்குப் பிறகு குறைந்த கொரோனா பாதிப்பு

2 mins read
8df06581-0027-4db7-b119-020a755f4d19
தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், கோல்கத்தாவில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதற்கான மையத்துக்கு வெளியே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

புதிதாக 281,386 பேருக்குக் கிருமித்தொற்று; பொடி வடிவில் தடுப்பு மருந்து அறிமுகம்

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா­வால் பாதிக்­கப்­ப­ட்டோர் எண்­ணிக்கை முந்­நூ­றா­யி­ரத்­துக்கும் கீழ் பதி­வாகி உள்­ளது.

கடந்த ஏப்­ரல் 21ஆம் தேதிக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக தொற்று எண்­ணிக்கை இவ்­வாறு குறைந்­துள்­ளது.

அண்­மைய சில தினங்­க­ளாகவே நாடு முழு­வ­தும் கொரோனா கிருமி தொற்­றி­யோர் எண்­ணிக்கை 400,000க்கும் அதி­க­மா­கப் பதி­வாகி வந்­தது. மேலும் நாள்­தோ­றும் நான்­கா­யி­ரத்­துக்­கும் அதி­க­மா­னோர் பலி­யாகி வந்­த­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 281,386ஆக குறைந்­தது. எனி­னும் மாண்­டோர் எண்­ணிக்கை 4,106ஆகப் பதி­வாகி உள்­ளது.

இந்­நி­லை­யில் கிரா­மப்­பு­றங்­களில் கொரோனா தொற்­றுப் பர­வ­லைத் தடுப்­ப­தற்­கான புதிய வழி­காட்டு நெறி­மு­றை­களை மத்­திய அரசு வெளி­யிட்­டுள்­ளது.

கிராம அள­வி­லான கண்­காணிப்பு, அந்­தந்­தப் பகு­தி­களில் உள்ள சுகா­தார அதி­கா­ரி­க­ளு­டன் தொலை­பேசி மூலம் கலந்­தாலோ­சித்து சிகிச்சை அளித்­தல், பரி­சோ­த­னை­கள் செய்­வ­தற்­கான பயிற்சி வழங்­கு­தல் போன்ற நடவ­டிக்கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

மேலும் ஊரகப் பகுதிகளில் தொற்று பரவாமல் இருக்க, ஆரம்ப சுகாதார உள்கட்டமைப்புகள் தயாராக உள்ளனவா என்பதை உறுதி செய்யும்படியும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பொடி வடிவ கொரோனா மருந்து இன்று முதல் பயன்பாட்டுக்கு வருகிறது.

டி-டியோக்ஸி டி-குளுகோஸ் (2-டிஜி) ஆகியவற்றின் கலவையில் இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமிக்கு எதிராக இந்த மருந்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது நிரூபிக்கப்பட்டதை அடுத்து விற்பனைக்கு வருகிறது.

பொடி வடிவில் இருப்பதால் இம்மருந்தை தண்ணீரில் கலந்து குடிக்க முடியும். முதற்கட்டமாக 10 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும் என்றும் உயிர்வாயு உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைவில் தொற்றில் இருந்து மீள இம்மருந்து கைகொடுக்கும் என்றும் நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.