கங்கை நதியில் உடல்கள் வீசப்படுவதை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு

கங்கை நதியில் உடல்கள் வீசப்படுவதை தடுக்க நடவடிக்கை: மத்திய அரசு உத்தரவு

1 mins read
2cd5783e-aa6f-4240-81b8-ffa4bb796fb7
-

புது­டெல்லி: கங்­கை­யில் மனித உடல்­கள் வீசப்­ப­டு­வ­தைத் தடுத்து நிறுத்த உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும் என உத்­த­ரப் பிர­தே­சம், பீகார் அர­சு­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

அண்­மைய சில தினங்­க­ளாக கங்கை நதி­யில் நிறைய உடல்­கள் மிதந்து செல்­வ­தாக புகார்­கள் எழுந்­துள்­ளன.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் பலி­யா­ன­வர்­க­ளின் உடல்­கள் இவ்­வாறு கங்­கை­யில் வீசப்­ப­டு­வ­தாக சமூக வலைத்­த­ளங்­க­ளி­லும் ஊட­கங்­க­ளி­லும் செய்­தி­கள் வெளி­யா­கின. இத­னால் தொற்­றுப்­ப­ர­வல் அதி­கரிக்­கும் என்றும் சுற்­றுச்­சூ­ழல் பாதிக்­கப்­படும் என்­றும் பல்­வேறு தரப்­பி­னர் கவலை தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கங்கை நதி­யில் உடல்­கள் வீசப்­ப­டு­வது விரும்­பத்­த­காத, ஆபத்­தான செயல் என மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பாக டெல்­லி­யில் உய­ர­தி­கா­ரி­கள் பங்­கேற்ற இரு ஆய்­வுக்­கூட்­டங்­கள் நடை­பெற்­றன.

இதை­ய­டுத்து கங்கை நதி­யில் இறந்­த­வர்­க­ளின் உடல்­கள் வீசப்­படு­வதை மாநில அர­சு­கள் தடுக்க வேண்­டும் என்­றும் இறந்­த­வர்­க­ளின் உடல்­களை உரிய விதத்­தில் அகற்ற வேண்­டும் என்­றும் மத்­திய அர­சின் ஜல­சக்தி அமைச்சு அறி­வு­றுத்தி உள்­ளது.

மேலும் கைப்­பற்­றப்­படும் உடல்­களை கண்­ணி­ய­மான முறை­யில் தகனம் செய்­வ­தற்கு உதவ வேண்­டும் என்­றும் மத்­திய அரசு இரு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்­ளது.