தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை: நடுக்கடலில் மூழ்கிய படகு; 127 பேர் மாயம்

3 mins read
52e05b94-cb07-4b60-9547-602018a87b6c
'டவ்தே' புயலில் சிக்கி மும்பை அருகே நடுக்கடலில் கவிழ்ந்த படகில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட ஆடவர் இந்திய கடற்படையினருக்கு தமது நன்றியைத் தெரிவிக்கிறார். படம்: ராய்ட்டர்ஸ் -

கரையைக் கடந்தது 'டவ்தே' புயல்: ஐந்து மாநிலங்களில் பெரும் சேதங்கள்

மும்பை: 'டவ்தே' புயல் நேற்று முன்­தி­னம் இரவு குஜ­ராத்­தின் போர்­பந்­தர் பகு­தி­யில் கரை­யைக் கடந்­தது. இந்­நி­லை­யில் கடும் சூறா­வ­ளிக் காற்­றால் நடுக்­க­ட­லில் கவிழ்ந்த பட­கி­லி­ருந்து 146 பேர் மீட்­கப்­பட்­ட­னர்.

எனி­னும் இந்­தி­யன் ஆயில் கார்ப்­ப­ரே­ஷன் (ஓஎன்­ஜிசி) நிறு­வ­னத்­தின் ஊழி­யர்­கள் 127 பேரின் கதி என்­ன­வா­னது எனத் தெரி­ய­வில்லை. அவர்­க­ளைத் தேடும் பணி தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கிறது.

'டவ்தே' புயல் கார­ண­மாக மகா­ராஷ்­டி­ரா­வின் பல்­வேறு பகு­தி­களில் பலத்த மழை பெய்­தது. மும்பை மாந­க­ரில் பலத்த காற்­றும் வீசி­யது. மும்பை அருகே நடுக்­க­ட­லில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த மிகப்­பெ­ரிய பட­கில் 'ஓஎன்­ஜிசி' ஊழி­யர்­கள் 273 பேர் தங்­கி­யி­ருந்­த­னர். இந்­தப் படகு அவர்­கள் தங்­கும் இட­மாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வந்­தது.

இந்­நி­லை­யில் மும்பை கடற்­கரைப் பகு­தி­யில் வீசிய பலத்த சூறா­வ­ளிக் காற்­றின் கார­ண­மாக அந்­தக் கப்­பல் நங்­கூ­ரத்­தை­யும் இழுத்­துக்­கொண்டு நக­ரத் தொடங்­கி­யது.

பின்­னர் அரு­கில் இருந்த எண்­ணெய் கிணற்­றின்­மீது மோதி­யது. இத­னால் அந்­தப் படகு சேத­ம­டைந்­ததை அடுத்து கடல்­நீர் உள்ளே நுழை­யத் தொடங்­கி­யது.

தக­வ­ல­றிந்து நடுக்­க­ட­லுக்கு விரைந்த இந்­திய கடற்­ப­டைக் கப்­பல்­கள் உட­ன­டி­யாக மூழ்­கும் பட­கில் இருந்து ஊழி­யர்­க­ளைக் காப்­பாற்­றும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டன.

நேற்று காலை 146 பேரை மீட்­டுள்­ள­தா­க­வும் எஞ்­சிய 127 பேரை தேடும் பணி தீவி­ர­ம­டைந்­துள்­ள­தா­க­வும் கடற்­படை தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

2,500 வீடு­கள் சேதம்; 7 பேர் பலி

நேற்று முன்­தி­னம் 'டவ்தே' புயல் மகா­ராஷ்­டி­ரா­வில் பலத்த சேதங்­களை ஏற்­ப­டுத்தி உள்­ளது. 2,500 வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ள­தா­க­வும் புயல் சீற்­றத்­துக்கு ஏழு பேர் பலி­யாகி உள்­ள­தா­க­வும் 'தினத்­தந்தி' நாளேட்­டின் செய்தி தெரி­விக்­கிறது.

தலை­ந­கர் மும்­பை­யில் 26 இடங்­களில் சுவர் இடிந்து விழுந்­த­தில் 8 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். மும்பை பெரு­ந­கர்ப் பகு­தி­யில் 600 மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. பல இடங்­களில் தண்­ணீர் வெள்­ள­மெ­னத் தேங்­கி­யுள்­ளது.

'டவ்தே' புயல் கார­ண­மாக மும்­பை­யில் மட்­டும் 214 மில்­லி­மீட்­டர் மழை பதி­வாகி உள்­ளது. இதற்கு முன்பு கடந்த 2000ஆம் ஆண்டு மே மாதம் அங்கு 190 மில்­லி­மீட்­டர் அள­வி­லான மழை பெய்­தி­ருந்­தது.

இர­வில் இரு­ளில் மூழ்­கிய கோவா

அண்டை மாநி­ல­மான கோவா­வில் மின் இணைப்பு முற்­றி­லு­மா­கத் துண்­டிக்­கப்­பட்­டது. இதை­ய­டுத்து நேற்று முன்­தி­னம் இரவு முழு­வ­தும் அம்­மா­நில மக்­கள் இரு­ளில் பொழு­தைக் கழித்­த­னர்.

'டவ்தே' புய­லுக்கு கேர­ளா­வில் ஆறு பேரும் கர்­நா­ட­கா­வில் எட்டு பேரும் பலி­யாகி உள்­ள­னர். கர்­நா­ட­கா­வில் 121 கிரா­மங்­களை இந்­தப் புயல் சூறை­யா­டி­யுள்­ளது.

கேர­ளா­வில் ஏழு பேர் இறந்த நிலை­யில் 1,500 வீடு­கள் சேத­ம­டைந்­துள்­ள­தாக அம்­மா­நில முதல்­வர் பின­ராயி விஜ­யன் அறி­வித்­துள்­ளார்.

40 ஆயி­ரம் மரங்­கள் சாய்ந்தன

குஜ­ராத்­தில் 40 ஆயி­ரத்­துக்­கும் அதி­க­மான மரங்­கள் சாய்ந்­தன என்­றும் 2,400 கிரா­மங்­க­ளுக்கு மின் விநி­யோ­கம் தடை­பட்­ட­தா­க­வும் 'ஸ்டி­ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுமார் இரு­நூ­றா­யி­ரம் பேர் பாது­காப்­பான இடங்­க­ளுக்கு அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். குஜ­ராத்­தில் சுமார் 20 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு இப்­போ­து­தான் மணிக்கு 150 கிலோ­மீட்­ட­ருக்கு மேல் வீசிய சூறைக்­காற்­று­டன் புயல் ஒன்று கரை­யைக் கடந்­துள்­ளது.

சேதத்­தின் அளவு அதி­க­மாக இருக்­கும் என்­றும் விரை­வில் முழு விவ­ரங்­களும் வெளி­யி­டப்­படும் என்­றும் அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.