தொற்று எண்ணிக்கை இறங்குமுகம்: மரண எண்ணிக்கை குறைந்தபாடில்லை

தொற்று எண்ணிக்கை இறங்குமுகம்: மரண எண்ணிக்கை குறைந்தபாடில்லை

2 mins read
d3bbca89-9436-4a46-b533-6b3c56190698
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரட்டைச் சகோதரர்களான ஜோஃப்ரெட், ரால்பிரெட் இருவரும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இருவருக்கும் வயது 24. கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் அதிலிருந்து முற்றிலும் குணமடைந்துவிட்டதாக இருவரும் சிகிச்சை பெற்ற மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இதனால் குடும்பத்தார் நிம்மதி அடைந்த நிலையில், திடீரென இருவரது உடல்நிலையும் மோசமடைந்தது. பின்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இருவரும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாவர். படம்: தகவல் ஊடகம் -

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று மீண்­டும் குறை­வ­தற்­கான அறி­கு­றி­கள் தென்­ப­டத் துவங்கி உள்­ளன.

நேற்று முன்­தி­னம் 263,533 பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­ய­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சில தினங்­க­ளுக்கு முன்பு வரை அன்­றா­டம் பதி­வா­கும் தொற்று எண்­ணிக்கை 400,000க்கும் மேல் பதி­வாகி வந்­தது. இப்­போது முந்­நூறு ஆயி­ரத்­துக்­கும் கீழ் பதி­வா­கிறது.

தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் தற்­போது 3.53 மில்­லி­யன் பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். நேற்று முன்­தி­னம் மட்­டும் 422,436 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். எனி­னும் மரண எண்­ணிக்கை மட்­டும் குறைந்­த­பா­டில்லை.

நேற்று முன்­தி­னம் மட்­டும் 4,329 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். பலி எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரிப்­ப­தால் நிபு­ணர்­கள் கவலை அடைந்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, சில மாநி­லங்­க­ளி­லும் தொற்று பாதிப்பு குறை­யத் தொடங்­கி­யுள்­ளது.

கர்­நா­ட­கா­வில் தொற்று பாதிப்பு ஏற்ற இறக்­க­மாக உள்­ளது. இரு தினங்­க­ளுக்கு முன்பு அங்கு 31 ஆயி­ரம் பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யது. எனி­னும் நேற்று முன்­தி­னம் 38 ஆயி­ரம் புதிய தொற்­றுச் சம்­ப­வங்­கள் பதி­வாகி உள்­ளன. ஒரே நாளில் 476 பேர் மாண்­டு­விட்­ட­னர்.

ஒடி­சா­வில் இன்று முதல் ஜூன் 1 வரை ஊர­டங்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ராஜஸ்­தான் மாநி­லத்­தில் புதிய நோய்த்­தொற்­றுச் சம்­ப­வங்­க­ளை­விட குண­ம­டைந்­தோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. நேற்று முன்­தி­னம் அங்கு 11,597 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதே சம­யம் 29,549 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

தெலுங்­கா­னா­வி­லும் நேற்று முன்­தி­னம் புதி­தாக 3,961 பேருக்கு கிருமி தொற்­றிய நிலை­யில், 5,559 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர்.

ஆந்­தி­ரா­வில் தின­மும் 20 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிக்­கப்­ப­டு­வதை அடுத்து அங்கு முழு ஊர­டங்கை அமல்­ப­டுத்­து­வது குறித்து மாநில அரசு ஆலோ­சித்து வரு­வதாக 'டெக்கான் கிரானிக்கல்' நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.