பினராயி பதவியேற்புக்கு 500 பேருக்கு மட்டுமே அழைப்பு

பினராயி பதவியேற்புக்கு 500 பேருக்கு மட்டுமே அழைப்பு

1 mins read
e7c60cf9-3ae3-4230-a1b6-8e84eb0a2458
-
Google News Preferred Icon

திருவனந்தபுரம்: கேரள முதல்வராக பினராயி விஜயன் நாளை (மே 20) பதவி ஏற்கிறார்.

இம்முறை பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்க 500 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்து முடிந்த கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பினராயி விஜயன் முதல்வராகப் பொறுப்பேற்றபோது 40 ஆயிரம் பேர் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆனால், கொரோனா நெருக்கடி காரணமாக இம்முறை பதவியேற்பு விழாவுக்கு 500 பேர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர்.