அதிகாரிகள்தான் தளபதிகள்: பிரதமர் மோடி பாராட்டு

அதிகாரிகள்தான் தளபதிகள்: பிரதமர் மோடி பாராட்டு

1 mins read
7593a59f-9da1-4a49-89af-4a6a416a2c08
-

புது­டெல்லி: கொரோனா தடுப்­பூசி தொடர்­பான அனைத்து கட்­டுக்­கதை­க­ளுக்­கும் எதி­ராக அனை­வ­ரும் ஒன்­றி­ணைய வேண்­டும் என்று பிர­த­மர் மோடி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

கடி­ன­மான சூழ­லுக்கு இடை­யி­லும் அதி­கா­ரி­கள் சிறப்­பாக பணி­யாற்றி வரு­வ­தாக அவர் பாராட்டு தெரி­வித்­துள்­ளார்.

கொரோனா தொற்று அதி­க­மாக உள்ள மாவட்­டங்­க­ளின் ஆட்­சி­யர்­கள், அதி­கா­ரி­க­ளு­டன் பிர­த­மர் மோடி நேற்று ஆலோ­சனை நடத்­தி­னார். அப்­போது, கொரோ­னா­வுக்கு எதி­ரான போரில் முக்­கிய பங்­காற்றி வரும் அதி­கா­ரி­கள்­தான் போர் தள­ப­தி­கள் என்று அவர் குறிப்­பிட்­டார்.

"'நாம் ஊர­கப் பகு­தி­களில் அதிக கவ­னம் செலுத்த வேண்­டும். நாட்­டில் உள்ள ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் ஒவ்­வொரு வித­மான சவால்­கள் உள்­ளன," என்­றார் பிர­த­மர் மோடி.

முன்­ன­தாக நாடு முழு­வ­தும் உள்ள மருத்­து­வர்­க­ளு­டன் காணொளி வசதி மூலம் கலந்­து­ரை­யா­டிய அவர், மருத்­து­வர்­க­ளின் கொரோனா கால அனு­ப­வங்­க­ளைக் கேட்­ட­றிந்­தார். அப்­போது, கரும் பூஞ்சை தாக்­கத்­தைக் கட்­டுப்­படுத்த மாநில அர­சு­கள் உரிய நட­வடிக்கை எடுக்­க­வேண்­டும் என அவர் கேட்டுக் கொண்­டார்.