அய்சால்: மியன்மாரைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தியாவின் எல்லையோர மாநிலமான மிசோராமில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
அந்நாட்டில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், எல்லை கடப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி மியன்மாரில் ராணுவப் புரட்சி வெடித்ததை அடுத்து மறுதினமே அந்நாட்டுக் காவல்துறையைச் சேர்ந்த சிலர் நாட்டை விட்டு வெளியேறினர்.
கடந்த ஏப்ரல் மாதத்தில் சுமார் 1,800 பேர் எல்லை கடந்த நிலையில், அண்மைய நாட்களில் ஒட்டுமொத்த எண்ணிக்கை 15,400ஆக அதிகரித்துள்ளது.
இத்தகவலை மிசோராம் மாநில திட்ட வாரியத் தலைவரான ரம்மாவி தெரிவித்துள்ளார்.
"மிசோராம் மாநில தலைநகரில் மட்டும் 6 ஆயிரம் மிசோராம் குடிமக்கள் உள்ளனர்.
"மற்றவர்கள் மாநிலத்தின் இதர ஐந்து மாவட்டங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்," என்று ரம்மாவி மேலும் தெரிவித்ததாக 'ராய்ட்டர்ஸ்' செய்தி முகமை கூறியுள்ளது.

