அமராவதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள அன்னவரம் சத்திய நாராயணசாமி கோவில், ஏலூர் துவாரகா திருமலை, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோவில், விசாகப்பட்டினம் சிம்மாச்சலம் நரசிம்மர் கோவில் உள்பட 13 மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற 16 பெரிய இந்து கோவில்களையும் 30க்கும் மேற்பட்ட இதர இந்து கோவில்களையும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான பணிகளை விரைந்து செய்து முடிக்குமாறு இந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. அதனைத் தொடர்ந்து பெரிய கோவில்களில் 1,000 படுக்கை வசதிகளும் சிறிய கோவில்களில் சுமார் 25 படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.

