இந்தியாவில் அபாயம் நீடிப்பு: உலக நிறுவனம்

இந்தியாவில் அபாயம் நீடிப்பு: உலக நிறுவனம்

2 mins read
b24325ad-e538-4bbf-a813-54c05dd301ae
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் நேற்­றுக் காலை வெளி­யி­டப்­பட்ட தக­வ­லின்­படி ஒரே நாளில் 4,529 பேர் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். இதுவே அங்கு பதி­வான ஆக அதி­க­மான மரண எண்­ணிக்கை. புதிய மர­ணங்­க­ளை­யும் சேர்த்து இது­வரை 283,248 பேர் தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

இதன் மூலம் உலக அள­வி­லான தொற்று மர­ணப் பட்­டி­ய­லில் அமெ­ரிக்கா, பிரே­சி­லுக்கு அடுத்து மூன்­றா­வது இடத்­தில் இந்­தியா உள்­ளது.

அமெ­ரிக்­கா­வில் 600,000க்கும் மேற்­பட்­டோ­ரும் பிரே­சி­லில் 440,000க்கும் மேற்­பட்­டோ­ரும் கிரு­மித்­தொற்­றால் மாண்­டு­விட்­ட­னர்.

இந்­தி­யா­வில் புதி­தா­கப் பதி­வா­கும் தொற்­று­க­ளின் எண்­ணிக்கை கடந்த 14ஆம் தேதி முதல் படிப்

­ப­டி­யா­கக் குறைந்து வரு­கிறது.

ஆறா­வது நாளாக இந்த எண்­ணிக்கை குறைந்­த­போ­தி­லும் மரண எண்­ணிக்கை தொடர்ந்து ஒவ்­வொரு நாளும் 4,000க்கும் மேல் பதி­வாகி வரு­கிறது.

குறிப்­பாக, சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு வச­தி­கள் குறை­வாக இருக்­கும் கிரா­மப்­பு­றங்­களில் தொற்று எண்­ணிக்­கை­யும் மரண எண்­ணிக்­கை­யும் அதி­க­மாக உள்­ளன.

இந்­நி­லை­யில், இந்­தி­யா­வில் தொற்று எண்­ணிக்­கை குறைந்­தா­லும் அபா­யம் நீடிப்­ப­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் தெரி­வித்து உள்­ளது.

அது வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், "மே 16 வரை­யி­லான ஒரு வார காலத்­தில் இந்­தி­யா­வில் பதி­வான தொற்­று­க­ளின் எண்­ணிக்கை அதற்கு முந்­திய வாரத்­தைக் காட்­டி­லும் 13 விழுக்­காடு குறைவு.

"ஆயி­னும் மரண எண்­ணிக்கை 4 விழுக்­காடு அதி­க­ரித்­து­விட்­டது. ஒரே வாரத்­தில் 27,922 பேர் உயி­ரி­ழந்துவிட்­ட­னர். இது கவ­னிக்­கப்­பட வேண்­டிய நிலவரம். 100,000 பேருக்கு 2 புதிய மர­ணம் என்ற விகி­தத்­தில் உயி­ரி­ழப்பு அதி­க­ரித்து வரு­கிறது.

"இந்­தியா மட்­டு­மல்­லாது உலக அள­வில், மேற்­கத்­திய பசி­பிக் வட்­டா­ரம் தவிர, இத­ரப் பகு­தி­கள் அனைத்­தி­லும் தொற்று எண்­ணிக்கை இந்த வாரம் குறை­வா­கப் பதி­வாகி உள்­ளது," என்று தெரி­வித்துள்­ளது.