சிகிச்சை மையமாக மாறும் ஆந்திரா கோவில்கள்

சிகிச்சை மையமாக மாறும் ஆந்திரா கோவில்கள்

1 mins read
ac4c5001-d07c-4e57-9039-4ca1ab2c4cda
-

அம­ரா­வதி: ஆந்­திர மாநி­லத்­தில் உள்ள அன்­ன­வ­ரம் சத்­திய நாரா­ய­ண­சாமி கோவில், ஏலூர் துவா­ரகா திரு­மலை, காணிப்­பாக்­கம் வர­சித்தி விநா­ய­கர் கோவில், ஸ்ரீசை­லம் மல்­லி­கார்­ஜு­னர் கோவில், விசா­கப்­பட்­டி­னம் சிம்­மாச்­ச­லம் நர­சிம்­மர் கோவில் உள்­பட 13 மாவட்­டங்­களில் உள்ள பிர­சித்தி பெற்ற 16 பெரிய இந்து கோவில்­க­ளை­யும் 30க்கும் மேற்­பட்ட இதர இந்து கோவில்­க­ளை­யும் கொரோனா சிகிச்சை மையங்­க­ளாக மாற்ற வேண்­டும் என்று முதல்­வர் ஜெகன்­மோ­கன் ரெட்டி உத்­த­ர­விட்­டுள்­ளார்.

இது தொடர்­பான பணி­களை விரைந்து செய்து முடிக்­கு­மாறு இந்து அற­நி­லை­யத்­து­றை­யின் கீழ் உள்ள கோவில்­கள் கேட்­டுக்­கொள்­ளப்­பட்டு உள்­ளன. அத­னைத் தொடர்ந்து பெரிய கோவில்­களில் 1,000 படுக்கை வச­தி­களும் சிறிய கோவி­ல்களில் சுமார் 25 படுக்கை வச­தி­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன.