தெலுங்கானாவில் பாதியாகக் குறைந்த தொற்று

தெலுங்கானாவில் பாதியாகக் குறைந்த தொற்று

1 mins read
49224594-dcbc-4b82-a12e-0b66a2cb7aba
-

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் கிருமித்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் பலன் அளிக்கத் தொடங்கி உள்ளன. மே 1ஆம் தேதி அந்த மாநிலத்தில் 7,430 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கட்டுப் பாடுகள் கடுமையாக்கப்பட்டன. அதன் காரணமாக 18 நாட்க ளில் தொற்று எண்ணிக்கை கிட்டத்தட்ட பாதியாக குறைந்து விட்டது என தெலுங்கானா பொது சுகாதார, குடும்பநல இயக்குநர் ஜி ஸ்ரீநிவாஸ் நேற்று கூறினார். செவ்வாய்க்கிழமை (மே 18) 3,891 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை உதார ணம் காட்டிய அவர், 2ஆம் அலையில் பாதிக்கப்பட்டோரில் 80% பேர் குணமடைந்துவிட்ட தாகக் குறிப்பிட்டார்.