கொரோனா மரண எண்ணிக்கை: டெல்லியை விஞ்சியது கர்நாடகா

கொரோனா மரண எண்ணிக்கை: டெல்லியை விஞ்சியது கர்நாடகா

2 mins read
38efe8f8-e6e1-4a09-afb7-290f7f79f451
அமிர்தசரஸ் நகரில் தடுப்பூசி போட்டுக்கொள்ள காத்திருக்கும் பொதுமக்கள். படம்: ஏஎஃப்பி -

ஒடிசாவில் இரவு ஊரடங்கு: நாடு முழுவதும் 1,118 மருத்துவர்கள் கொரோனாவுக்கு பலி

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றால் புதி­தாக பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை கடந்த ஆறு நாள்­க­ளாக குறைந்­துள்­ளது. எனி­னும் சில மாநி­லங்­களில் மீண்­டும் கிரு­மித்­தொற்று அதி­க­ரித்து வரு­கிறது.

மேலும் சில மாநி­லங்­களில் ஊர­டங்கு அமல்­ப­டுத்­தப்­பட்ட பிற­கும் எதிர்­பார்த்த அள­வுக்கு தொற்­றுப்­ப­ர­வல் குறை­ய­வில்லை.

இந்­நி­லை­யில் மரண எண்­ணிக்­கை­யில் டெல்­லி­யை விஞ்சியது கர்­நா­டகா. கடந்த 17 நாள்­களில் மட்­டும் கர்­நா­ட­கா­வில் 6,790 பேர் கொரோனா கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­கி­விட்­ட­னர்.

இதன்­மூ­லம் மரண எண்­ணிக்கை பட்­டி­ய­லில் அம்­மா­நி­லம் இரண்­டாம் இடம் பிடித்­துள்­ளது.

முதல் இடத்­தி­லுள்ள மகா­ராஷ்­டி­ரா­வில் 82,486 பேரும் கர்­நா­ட­கா­வில் 22,313 பேரும் டெல்­லி­யில் 21,846 பேரும் தமி­ழ­கத்­தில் 18 ஆயி­ரம் பேரும் உத்­த­ரப் பிர­தே­சத்­தில் 17,817 பேரும் பலி­யா­கி­விட்­ட­னர்.

இதற்­கி­டையே மகா­ராஷ்­டி­ரா­வில் தொற்று பாதிப்பு குறைந்து வரு­கிறது. நேற்று முன்­தி­னம் அங்கு 28 ஆயி­ரம் பேருக்கு புதி­தாக கிருமி தொற்­றி­யுள்­ளது.

தலை­ந­கர் மும்­பை­யில் பத்து வாரங்­களில் இல்­லாத அள­வுக்கு அன்­றா­டம் பதி­வா­கும் தொற்­றுச் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை 953ஆக குறைந்­துள்­ளது.

கேர­ளா­வில் நேற்று முன்­தி­னம் 31,337 பேருக்கு கொரோனா தொற்­றி­யி­ருப்­பது உறு­தி­யா­னது. ஒரே நாளில் 97 பேர் பலி­யா­கி­விட்­ட­னர்.

அம்­மா­நி­லத்­தில் இது­வரை 6,612 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர். பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் 347,626 பேர் இப்­போது சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

கேர­ளா­வில் ஊர­டங்கு அம­லில் உள்ள போதி­லும் தொற்­றுப்­ப­ர­வல் எதிர்­பார்த்த அளவு குறை­ய­வில்லை. இதை­ய­டுத்து கொரோனா கட்­டுப்­பா­டு­கள் கடு­மை­யாக்­கப்­படும் எனத் தெரி­கிறது.

ஒடி­சா­வில் நேற்று முதல் ஜூன் 1ஆம் தேதி வரை இரவு நேர ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என்­றும் வார இறுதி நாள்­களில் முழு ஊர­டங்கு அம­லில் இருக்­கும் என்­றும் அம்­மா­நில அரசு தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே டெல்லி சிறை­யில் கைதி­க­ளுக்கு மத்­தி­யில் தொற்­றுப்­ப­ர­வல் அதி­க­ரிப்­பதை தடுக்­கும் வித­மாக 18 முதல் 44 வய­துக்­குட்­பட்ட கைதி­க­ளுக்கு தடுப்­பூசி போடும் பணி தொடங்கி உள்­ளது.

டெல்­லி­யில் உள்ள மூன்று சிறை­க­ளி­லும் ஏற்­கெ­னவே 45 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கான தடுப்­பூசி போடும் பணி தொடங்­கி­ய­தில் இருந்து இது­வரை 1,472 பேருக்கு தடுப்­பூசி போடப்பட்டுள்­ளது.

மூன்று சிறை­க­ளி­லும் சுமார் 19,500 கைதி­கள் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்­கி­டையே, கொரோனா தொற்று பாதிப்­பால் நாடு முழு­வ­தும் 1,118 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக இந்­திய மருத்­துவக் கழகத் தலை­வர் ஜெய­லால் கூறியுள்ளார்.