சுவேந்து அதிகாரியை விசாரிக்க சிபிஐ முடிவு

சுவேந்து அதிகாரியை விசாரிக்க சிபிஐ முடிவு

2 mins read
d2ef1f64-f96f-45da-ab7e-2420c37a62c9
-

கோல்­கத்தா: லஞ்ச வழக்­கில் தொடர்­பு­டைய பாஜக எம்பி சுவேந்து அதி­கா­ரி­யி­டம் விசா­ரணை நடத்த சிபிஐ முடிவு செய்­துள்­ளது. அவ­ரு­டன் சேர்த்து மேலும் மூவர் விசா­ரிக்­கப்­பட உள்­ள­னர்.

சுவேந்து அதி­காரி நாடாளு­மன்ற உறுப்­பி­னர் என்­ப­தால் அவரை விசா­ரிக்­கவோ, கைது செய்­யவோ மக்­க­ளவை சபா­நா­ய­க­ரின் அனு­மதி தேவை. இதை­யடுத்து அதற்­கான நட­வ­டிக்­கை­களை சிபிஐ மேற்­கொண்­டுள்­ளது.

ஊடகவியலாளர் ஒருவர் தம்மை தொழி­ல­தி­ப­ராக அறிமுகப்­படுத்­திக்­கொண்டு மேற்கு வங்க மாநி­லத்­தில் உள்ள திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த சில பிர­மு­கர்­க­ளுக்கு லஞ்­சம் கொடுத்­தார். பின்­னர் இந்த லஞ்­சம் அளிக்­கும் பட­லத்தை அவர் ஆதா­ரங்­க­ளு­டன் அம்­ப­லப்­ப­டுத்­தி­னார்.

இந்த விவ­கா­ரத்­தில் சுவேந்து அதி­கா­ரி­யும் சிக்­கி­யுள்­ளார். எனி­னும் பின்­னர் திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யில் இருந்து வில­கிய அவர், பாஜ­க­வில் இணைந்­தார். மேலும் அண்­மை­யில் நடந்து முடிந்த மேற்­கு­வங்க சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் நந்­தி­கி­ராம் தொகு­தி­யில் முதல்­வர் மம்தா பானர்­ஜிக்கு எதி­ராக பாஜ­க­வால் கள­மி­றக்­கப்­பட்­டார்.

இதற்­கி­டையே இந்த ஊழல் விவ­கா­ரம் தொடர்­பாக மேற்கு வங்க மாநில அமைச்­சர்­கள் இரு­வர் உட்­பட நான்கு பேரை சிபிஐ அண்­மை­யில் கைது செய்­துள்­ளது. இதற்கு முதல்­வர் மம்தா கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளார்.

எனி­னும், சுவேந்து அதி­காரி கைது செய்­யப்­ப­ட­வில்லை. இது­கு­றித்து பல்­வேறு தரப்­பி­ன­ரும் கேள்வி எழுப்­பி உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அவ­ரைக் கைது செய்ய மக்­க­ள­வைத் தலை­வ­ரின் அனு­மதி தேவை என்­றும் அதற்­காக காத்­தி­ருப்­ப­தா­க­வும் சிபிஐ தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் ஊழல் வழக்கு தொடர்­பில் தங்­கள் கட்­சி­யைச் சேர்ந்த மேலும் சில மக்­கள் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் முக்­கி­யப் பிர­மு­கர்­க­ளுக்­கும் சிபிஐ குறி­வைத்­துள்­ளது என்­றும் கட்சி மாறி தற்­போது பாஜ­க­வில் உள்ள திரி­ணா­முல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் மீது சிபிஐ நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றும் மம்தா கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் சாடு­கின்­ற­னர்.

மேலும், மேற்­கு­வங்க தேர்­த­ல் தோல்வியால் மத்­தி­யில் உள்ள பாஜக அரசு திரி­ணாமுல் காங்­கி­ரஸ் கட்­சி­யி­ன­ரைப் பழி­வாங்கு­வ­தா­க­வும் முதல்­வர் மம்தா­வின் ஆத­ர­வா­ளர்­கள் சாடி­யுள்­ள­னர்.