மகாராஷ்டிரா இலக்கு: 3,000 மெட்ரிக் டன் உயிர்வாயு

மகாராஷ்டிரா இலக்கு: 3,000 மெட்ரிக் டன் உயிர்வாயு

1 mins read
32f95456-2f53-46fe-aede-36bc98f39a9a
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் நோயா­ளி­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்க போது­மான உயிர்­வாயு இருப்­பதை அரசு உறுதி செய்­யும் என முதல்­வர் உத்­தவ் தாக்­கரே தெரி­வித்­துள்­ளார்.

தின­மும் மூவா­யி­ரம் மெட்­ரிக் டன் உயிர்­வா­யுவை உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யிக்­கப்­ப­டு­வ­தாக அவர் சீரடி பொது மருத்­து­வ­ம­னை­யில் உயிர்­வாயு உற்­பத்தி மையத்­தைத் தொடங்கி வைத்­துப் பேசும்­போது குறிப்­பிட்­டார்.

கொரோனா இரண்­டா­வது அலை மகா­ராஷ்­டி­ரா­வில் பெரும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தி விட்­ட­தாக குறிப்­பிட்ட அவர், இந்த அலையைச் சமா­ளிப்­ப­தற்கு உயிர்­வாயு தங்­கு­த­டை­யின்றி கிடைக்­க­வேண்­டி­யது அவ­சி­யம் என்­றார்.

"கொரோனா மூன்­றா­வது அலை ஏற்­படும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது. அதை எதிர்­கொண்டு சமா­ளிக்க திறம்­பட செயல்­பட வேண்­டும். அதற்கு உயிர்­வாயு உற்­பத்தி அதி­க­ரிப்­பது அவ­சி­யம்.

"மகா­ராஷ்­டி­ரா­வில் தினந்­தோறும் மூவா­யி­ரம் மெட்­ரிக் டன் மருத்­துவ உயிர்­வா­யுவை உற்­பத்தி செய்­வதே தற்­போது நல்ல தீர்­வாக அமை­யும்.

"அதற்­கேற்ப இலக்கு நிர்­ண­யித்து மகா­ராஷ்­டிர அரசு செயல்­பட்டு வரு­கிறது," என்று முதல்­வர் உத்­தவ் தாக்­கரே மேலும் தெரி­வித்­துள்­ளார்.

மகாராஷ்டிராவில் இப்போது தொற்று பாதிப்பு மெல்ல குறைந்து வருகிறது.