கறுப்பு பூஞ்சை நோய்: மருந்து விநியோகிக்க நடவடிக்கை

கறுப்பு பூஞ்சை நோய்: மருந்து விநியோகிக்க நடவடிக்கை

1 mins read
4e87700b-8937-4b0b-99e8-d51a2a1bdfaf
-

புது­டெல்லி: கறுப்பு பூஞ்சை நோயால் தாக்­கப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தற்­குத் தேவைப்­படும் மருந்து அனைத்து மாநி­லங்­க­ளுக்­கும் விநி­யோ­கிக்­கப்­படும் என மத்­திய இணை அமைச்­சர் மன்­சுக் மண்­ட­வியா தெரி­வித்­துள்­ளார்.

இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க 'அம்­ஃபோ­டெ­ரி­சின்-பி' என்ற மருந்து கைகொ­டுப்­ப­தாக அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசு­கை­யில் குறிப்­பிட்­டார்.

இக்­கு­றிப்­பிட்ட மருந்­துக்கு நில­வும் தேவை, அதன் விநி­யோக நிலை குறித்து அவர் நேற்று ஆய்வு மேற்­கொண்­டார்.

அப்­போது இம்­ம­ருந்­தின் உள்­நாட்டு உற்­பத்­தியை அதி­க­ரிப்­பது குறித்து மத்­திய அரசு திட்­டம் வகுத்­தி­ருப்­ப­தா­க­வும் பல்­வேறு நாடு­களில் இருந்து மருந்தை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசு மேற்­கொண்­டுள்­ளது என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

தற்­போது மருந்­துக்­கான தேவை திடீ­ரென பல மாநிலங்களில் அதி­க­ரித்­துள்ள நிலை­யில் விநி­யோ­க­மும் பல­ம­டங்கு உயர்ந்­துள்­ள­தாக அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

'அம்­ஃபோ­டெ­ரி­சின்-பி' மருந்தை முறை­யாக வழங்­க­வும் விநி­யோக சங்­கிலி மேலாண்­மையை மேம்­ப­டுத்­த­வும் மத்­திய அரசு உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக குறிப்­பிட்ட அவர், பற்­றாக்­குறை என்ற நிலை விரை­வில் மாறும் என்­றார்.

ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டுள்ள வழி­மு­றை­க­ளைப் பின்­பற்றி நேர்­மை­யான வழி­யில் இம்­ம­ருந்து பயன்­ப­டு­வதை மாநில அர­சு­கள் உறுதி செய்­ய­வேண்­டும் என்­றும் மத்திய அமைச்சர் மன்­சுக் மண்­ட­வியா கேட்­டுக் கொண்­டுள்­ளார்.