'டவ்தே' சீற்றத்தால் 61 பேர் பலி; நடுக்கடலில் தத்தளிக்கும் 390 பேரை மீட்க நடவடிக்கை

'டவ்தே' சீற்றத்தால் 61 பேர் பலி; நடுக்கடலில் தத்தளிக்கும் 390 பேரை மீட்க நடவடிக்கை

2 mins read
71b402f0-b09a-4986-bf17-910bd5d6d3f7
-

மும்பை: 'டவ்தே' புயல் குஜ­ராத்­தில் கரை­யைக் கடந்­துள்ள நிலை­யில் அது வலு­வி­ழந்­துள்­ள­தாக வானிலை ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

புய­லின் தாக்­கத்­தால் மரண எண்­ணிக்கை 61ஆக அதி­க­ரித்­துள்­ளது. நூற்­றுக்­கும் மேற்­பட்ட பொது­மக்­க­ளைக் காண­வில்லை.

இதற்­கி­டையே புயல் கார­ண­மாக மும்பை அருகே அர­பிக் கட­லில் இரண்டு பட­கு­களில் தத்­த­ளித்த 317 பேர் மீட்­கப்­பட்­டுள்­ள­னர். மேலும் 390 பேரை தேடும் மீட்கும் பணிகள் நடை­பெற்று வரு­கின்றன.

முன்­ன­தாக மும்பை கடற்­ப­கு­தி­யில் இரண்டு கப்­பல்­கள் மட்­டுமே புய­லில் சிக்­கித் தத்­த­ளிப்­ப­தாக தக­வல் வெளி­யா­னது. பின்­னர் நான்கு கப்­பல்­கள் புய­லில் சிக்­கிக் கொண்­ட­தா­க­வும் அவற்­றில் 707 பேர் இருந்­த­தா­க­வும் தெரி­ய­வந்­தது. அங்கு மீட்­புப் பணி­கள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன.

இதற்­கி­டையே நடுக்­க­ட­லில் மூழ்­கிய கப்­ப­லில் இருந்த 14 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். அவர்­க­ளின் உடல்­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. இத்­த­க­வலை மேற்கு கடற்­படை உறுதி செய்­துள்­ளது.

திங்­கள்­கி­ழ­மை­யன்று மும்பை கடற்­ப­கு­தி­யில் நங்­கூ­ர­மிட்டு நின்­றி­ருந்த அந்­தக் கப்­பல் புய­லின் தாக்­கத்­தால் கட­லுக்­குள் இழுத்­துச் செல்­லப்­பட்­டது. பின்­னர் அது கட­லில் மூழ்­கி­யது.

குஜ­ராத்­தில் 'டவ்தே' புய­லால் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை பிர­த­மர் நரேந்­திர மோடி ஆய்வு செய்­தார்.

குஜ­ராத்­தின் பல்­வேறு பகு­தி­களில் அவர் ஹெலி­காப்­ட­ரில் பறந்­த­படி ஆய்வு மேற்­கொண்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

அதன் பின்­னர் புயல் பாதிப்பு குறித்து குஜ­ராத் முதல்­வ­ரு­டன் கலந்­தா­லோ­சித்­தார் பிர­த­மர் மோடி.

இதை­ய­டுத்து அம்­மா­நி­லத்­துக்கு தேவை­யான உத­வி­களை மத்­திய அரசு செய்­யும் என்று அவர் உறு­தி­ய­ளித்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.