குஜராத்துக்கு 'டவ்தே' புயல் சேத நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி அறிவிப்பு

குஜராத்துக்கு 'டவ்தே' புயல் சேத நிவாரண நிதியாக ரூ.1,000 கோடி அறிவிப்பு

3 mins read
d567a441-7783-4ee3-96a2-644916ee5c73
ஹெலிகாப்டரில் இருந்தவாறு குஜராத்தில் புயலால் சேதமடைந்த பகுதிகளை ஆய்வு செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஊடகம் -

அகமதா­பாத்: அர­பிக்­க­ட­லில் உரு­வான 'டவ்தே' புயல், கடந்த திங்­கள்­கி­ழமை இர­வில் குஜ­ராத் மாநி­லத்­தில் கரை­யைக் கடந்­தது. அப்­போது அது அந்த மாநி­லத்­தின் கட­லோ­ரப்­ப­கு­தி­களில் கடு­மை­யான சேதத்தை உண்­டு­பண்­ணி­யுள்­ளது.

அங்கு 16,000 வீடு­கள் இடிந்து தரை­மட்­ட­மா­கின. 40,000 மரங்­கள் வேரோடு சாய்ந்­தன. 70,000 மின்­கம்­பங்­களும் சாய்ந்­தன.

மின்­வி­நி­யோ­கம் துண்­டிக்­கப்­பட்டு 5,951 கிரா­மங்­கள் இரு­ளில் மூழ்­கின. சாலை­கள் உருக்­கு­லைந்து போன­தால் சாலைப்­போக்கு வரத்து முற்­றி­லும் தடை­பட்டு மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

அண்­மை­யில் இது­வ­ரை­ இல்­லா­த­வ­கை­யில் இந்­தப்­பு­யல் அங்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

சௌராஷ்­டிரா பகு­தி­யில் இருந்து வடக்கு குஜ­ராத் வரை­யில் 46 தாலு­காக்­களில் 100 மி.மீ. மழை கொட்­டி­யது. 13 பேர் புயல், மழை, வெள்­ளத்­தில் பலி­யா­னார்­கள். இது அந்த மாநி­லத்­தைப் பெருத்த சோகத்­தில் ஆழ்த்­தி­யது.

இந்த நிலை­யில் நேற்று முன்­தினம் பிர­த­மர் நரேந்­திர மோடி டெல்­லி­யில் இருந்து சிறப்­பு­ வி­மா­னம் மூலம் குஜ­ராத்­தின் பாவ் நக­ருக்­குச் சென்­றார். அங்­கி­ருந்து அவர், ஹெலி­காப்­டர் மூலம் புய­லால் பெரும் சேதம் அடைந்த கிர்-சோம்­நாத், பாவ்­ந­கர், அம்­ரேலி, உனா, டையு யூனி­யன் பிர­தே­சம், ஜபா­ரா­பாத், மகுவா உள்­ளிட்ட பகு­தி­க­ளைப் பார்­வை­யிட்டு ஆய்வு செய்­தார். அப்­போது அவ­ரு­டன் மாநில முதல்­வர் விஜய் ரூபானி உடன் இருந்­தார்.

இதை­யொட்டி பிர­த­மர் மோடி டுவிட்­ட­ரில் வெளி­யிட்ட பதி­வில், "டவ்தே புயல் பாதிப்­புக்­குள்­ளான குஜ­ராத் மற்­றும் டையு பகு­தி­கள் வான்­வ­ழி­யாக ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது. இந்­தப் புயல் பாதித்த அனைத்து மாநி­லங்­க­ளு­ட­னும் மத்­திய அரசு அணுக்­க­மாக இணைந்து செய­லாற்றி வரு­கிறது," என குறிப்­பிட்­டுள்­ளார்.

அதைத் தொடர்ந்து அகமதாபாத்­துக்கு வந்த பிர­த­மர் ேமாடி அங்கு உயர் அதி­கா­ரி­க­ளின் கூட்­டத்­தைக்­கூட்டி ஆய்வு நடத்­தி­னார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

விமான நிலை­யத்­தில் உள்ள குஜ்­சைல் வளா­கத்­தில் நடந்த இந்த ஆய்­வுக்­கூட்­டத்­தில் முதல்­வர் விஜய் ரூபானி, மாநில அரசு தலை­மைச்­செ­ய­லா­ளர் அனில் முகிம், கூடு­தல் தலை­மைச்­செ­ய­லா­ளர் (வரு­வாய்) பங்­கஜ் குமார் மற்­றும் அதி­கா­ரி­கள் கலந்­து­கொண்­டார்­கள்.

அப்போது பிர­த­மர் ேமாடி­யி­டம் புயல் பாதிப்­பு­கள் குறித்து விரி­வாக எடுத்­துக்­கூ­றப்­பட்­டது.

ஆய்­வுக்­கூட்­டத்­தை­ய­டுத்து குஜ­ராத்­தில் புயல் பாதித்த பகு­தி­களில் உட­னடி நிவா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு மத்­திய அரசு ரூ.1,000 கோடி நிதி வழங்­கு­வ­தாக பிர­த­மர் மோடி அறி­வித்­தார்.

புயல் தொடர்­பான சம்­ப­வங்­களில் உயி­ரி­ழந்­தோ­ரின் குடும்­பங்­க­ளுக்குத் தலா ரூ.2 லட்­ச­மும், காயம் அடைந்­தோ­ருக்கு தலா ரூ.50 ஆயி­ர­மும் இழப்­பீ­டாக வழங்­கப்­படும் என்­றும் அவர் அறி­வித்­தார்.

மகாராஷ்டிராவில் பிரதமர் ஆய்வு மேற்கொள்ளாதது ஏன்?

பிர­த­மர் மோடி, புய­லால் பாதிக்­கப்­பட்ட மகா­ராஷ்­டிர மாநிலப் பகு­தி­க­ளைப் பார்­வை­யி­டா­தது குறித்து தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்சி கவலை தெரி­வித்­துள்­ளது.

இது­குறித்து அக்கட்­சி­யின் செய்­தித் தொடர்­பா­ளர் நவாப் மாலிக் கூறி­ய­தா­வது:-

"பிர­த­மர் நரேந்­திர மோடி குஜ­ராத் மற்­றும் டாமன் டையு பகு­தி­களில் சுற்றிச் சுழன்று புய­லுக்குப் பின் அங்கு ஏற்­பட்­டுள்ள பாதிப்­பு­களை ஆய்வு செய்­தார்.

"ஆனால், அதே நேரம் மகா­ராஷ்­டி­ரா­வில் பாதிக்­கப்­பட்ட இடங்­களை அவர் எட்­டிக்­கூட பார்க்க மறுப்­பது ஏன்? இது தெளி­வான பாகு­பாடு அல்­லவா?" என்று கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.